• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /CPS ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: 20% பிடித்தம் ரத்து செய்து தமிழக நிதித்துறை உத்தரவு!

CPS ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: 20% பிடித்தம் ரத்து செய்து தமிழக நிதித்துறை உத்தரவு!

Tamil Nadu Government Teachers News : CPS ஆசிரியர்களுக்கு மறுபணி காலத்தில் கடைசி ஊதியமே முழு சம்பளம். 20% பிடித்தம் ரத்து செய்து தமிழக நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 16, 2026, 06:43 AM IST|Updated: Oct 16, 2026, 06:54 AM IST
joinshare
CPS ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: 20% பிடித்தம் ரத்து செய்து தமிழக நிதித்துறை உத்தரவு!
Image Credit: Tamil Nadu Government Teachers News

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

2

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

3

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

4

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

5

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government Teachers News : தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்பை தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மறுபணி நியமன காலத்தில் ஊதியப் பிடித்தம் மற்றும் கணக்கு தலைப்புகள் தொடர்பாக நீண்ட நாட்களாக நீடித்து வந்த நடைமுறை சிக்கல்களுக்கு இதன் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புதிய மருத்துவக் காப்பீடு அப்டேட் : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல் - Explained

மறுபணி நியமனத்தில் நிலவிய ஊதியக் குழப்பம்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் கல்வியாண்டின் பாதியில் ஆசிரியர்களின்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கல்வியாண்டுக்கு இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டின் இறுதி வரை மறுபணி நியமன அடிப்படையில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

01.04.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஓய்வுக்குப் பின் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போல் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், மறுபணி நியமன காலத்தில் அவர்களுக்கு கடைசி ஊதியம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும், CPS திட்டத்திற்கான 20% பங்களிப்பு (பணியாளர் பங்களிப்பு 10% + அரசு பங்களிப்பு 10%) பிடித்தம் செய்யப்பட வேண்டுமா என்ற குழப்பம் கருவூலங்கள் மற்றும் கணக்கு துறையில் நீடித்து வந்தது. இதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முழுமையான ஊதியம் கிடைப்பதில் காலதாமதமும் தடைகளும் ஏற்பட்டன.  

நிதித்துறையின் அதிகாரப்பூர்வ தெளிவுரை கடிதம்

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர், கருவூலக் கணக்குத் துறை இயக்குநருக்கு விரிவான தெளிவுரைக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்....

கடைசி ஊதியமே முழு சம்பளம்: 01.04.2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்து CPS திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், கல்வியாண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யப்படும் போது, அவர்கள் பணி ஓய்வுக்கு முன்னர் கடைசியாக என்ன ஊதியம் பெற்றார்களோ, அதே முழு ஊதியமும் மறுபணி காலத்திற்கான ஊதியமாக வழங்கப்படும்.  

20% பங்களிப்பு பிடித்தம் தேவையில்லை:

மறுபணி நியமனக் காலத்தில் ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு உள்ளிட்ட 20% CPS பிடித்தத்தை பிடித்தம் செய்யத் தேவையில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

ஒப்பந்த அடிப்படை: மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ‘ஒப்பந்த அடிப்படையிலான கணக்குத் தலைப்பின்’ (Contract Basis Head of Account) கீழ் பெற்று வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.  

பிடித்தம் செய்யப்பட்ட வித்தியாசத் தொகை திருப்பி ஒப்படைப்பு: ஏற்கனவே மறுபணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் எந்தத் தலைப்பின் கீழ் ஊதியம் பெற்றார்களோ, அதே தலைப்பின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட வித்தியாசத் தொகையையும் பெற்று வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.  

நிதி ஒதுக்கீடு சிக்கல்களுக்கு தற்காலிக தளர்வு மற்றும் புதிய வழிகாட்டல்: ஒப்பந்த ஊதிய தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு இல்லாத நேர்வுகளில், மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை 30.09.2026 வரை வழக்கமான ஊதிய தலைப்பின் கீழேயே பெற்று வழங்க கருவூலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் தங்கள் நிர்வாகத் துறை வழியாக நிதித்துறைக்கு முன்மொழிவுகளை அனுப்பி, ஒப்பந்த ஊதிய தலைப்பின் கீழ் முன்கூட்டியே உரிய நிதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

யாருக்கெல்லாம் நேரடிப் பலன் கிடைக்கும்?

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தெளிவுரையின் மூலம் பின்வரும் தரப்பினர் முழுப் பலனைப் பெறுவர்:

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள். 

கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள்.  

2025–2026 கல்வியாண்டில் பணிக்காலத்தில் இடையில் ஓய்வுபெற்று தற்போது மறுபணியில் உள்ள அனைத்து CPS ஆசிரியர்கள்.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு

மறுபணி காலத்தில் சம்பளம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்திலும், பிடித்தங்கள் மற்றும் தலைப்பு மாற்றங்களால் மாத ஊதியம் தள்ளிப்போனதாலும் தவித்து வந்த ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய நிதிப் பாதுகாப்பை தந்துள்ளது. ஓய்வுபெறும் வயதிலும் மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் இந்த உத்தரவை பிறப்பித்த தமிழக அரசுக்கும் நிதித்துறைக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க | அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன? அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu