• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன? அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!

அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன? அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி, உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கமளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Written ByYuvashree M
Published: Oct 15, 2026, 03:06 PM IST|Updated: Oct 15, 2026, 03:15 PM IST
joinshare
அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன? அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!
Image Credit: அரிசி விலை உயர்வு பற்றி வெங்கட்ரமணன் பேச்சு | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

2

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

3

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

4

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

5

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டை பொருத்தவரை, கடந்த ஒரு மாதத்தில் அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை, கடுமையாக உயர்ந்திருக்கிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இப்படி அரிசி, பருப்பின் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரிசி விலை உயர்வு:

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அரிசியானது, ஒரு மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. சில்லறை விற்பனையில், தரமான பொன்னி அரிசியானது கிலோவிற்கு ரூ.55ல் இருந்து ரூ.70ஐ தாண்டி இருக்கிறது. அதே போல, பருப்பு வகைகளின் விலையும், கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்திருக்கிறது. இதனால், நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.

அமைச்சர் கொடுத்த விளக்கம்:

சமீபத்தில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான பரந்தாமன் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சார பற்றாக்குறை தொடர்பாக தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

பொது மக்களின் அன்றாட பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் அரசு உரிய கவனம் செலுத்துவதில்லை என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் படிக்க | தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும்? அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

உணவுத்துறை அமைச்சருக்கு சவால் விட்ட பரந்தாமன்!

விலைவாசி உயர்வு இல்லை என்றும் கூறும், உணவுத்துறை அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு ஓபன் சேலஞ்ச் விடுவதாக கூறிய அவர், இருவரும் நேரடியாக மயிலாபூர் அல்லது சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் சந்தைக்கு செல்வோம் என்றும், அங்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் அளித்த பதில்:

சமீபத்தில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஐ.பரந்தாமன் விடுத்த சவால் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து அரிசி வரத்து குறைந்திருப்பதால் விலை உயர்ந்திருப்பதாகவும், அரிசி, சர்க்கரை, பருப்பு விலை குறைப்பு தொடர்பாக ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விலைவாசி குறித்து அரைகுறையாக தெரிந்து கொண்டு திமுக நிர்வாகி பரந்தாமன் சவால் விடுப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, “பரந்தாமன் செல்லாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் ரேஷன் கடை பொருட்களை வாங்கி உணவு உண்டு வாழ்ந்தவர்கள்தான்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், அமுதம் அங்காடி மூலம் இன்று முதல் சன்ன ரக அரிசி விற்கப்படும் என்றும், இன்று முதல் தமிழ்நாட்டில் விளையும் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்கப்படும் என்றும் கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி அரிசியின் விலை குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, இது குறித்து பேசுகையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், விலை ஏற்றம் தொடரும் எனவும் விவசாய சங்க மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிப்பதோடு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (அக்., 16) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இங்கே!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu