• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு

Dengue Alert: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் பொருட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமச்சர் விஜய் முக்கிய உத்தரவுகளை பிறப்பத்துள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 21, 2026, 05:55 PM IST|Updated: Sep 21, 2026, 06:00 PM IST
joinshare
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு
Image Credit: Tamil Nadu Dengue Alert

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Dengue Alert: டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டவாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, நோய் அதிகரித்துவரும் பகுதிகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் முதலியவற்றைக் கண்டறிந்து கொசுப்புழு மற்றும் முதிர் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் புகை மருந்து அடிக்கும் உபகரணங்களின் இருப்பு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, Aedes கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும். பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறவும். கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

மேலும், டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதோடு. தேவையான ஆய்வகப் பரிசோதனைகள், நோயாளியின் மருத்துவ மதிப்பீடு. எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தல், திரவ சிகிச்சை சிகிச்சை வசதிகள், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

மேலும். இப்பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையோடு தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல் மற்றும் கற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், பருமழை தொடர்பான முன்னெச்சரிக்கை கூட்டமும் நடைபெற்றது. இதில், குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், அவசரகால மீட்புப் பணிகளின்போது, மாவட்ட அளவில் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதையும். படகுகள். உயிர்காக்கும் மிதவைகள். கயிறுகள். மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

அத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூவம் தகவல் வழங்கப்படுவதையும், செயற்கைக்கோள் தொலைபேசி (Satellite phone) உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் தயாராக உள்ளதா
என்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென்றும், சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும், சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பருவமழைக் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu