• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?

Tamil Nadu Driving Licence Download: தமிழ்நாட்டில் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 01, 2026, 08:07 PM IST|Updated: Nov 01, 2026, 08:14 PM IST
joinshare
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம்  டவுன்லோடு செய்வது எப்படி?
Image Credit: Tamil Nadu Driving Licence Download

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம்  டவுன்லோடு செய்வது எப்படி?

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?

2

TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

3

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

4

EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

5

CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Driving Licence Download: தமிழகத்தில் வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் ஒரு புதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து முதன்மைச் செயலாளர் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் 02.09.2026 அன்று ஆற்றிய அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த அரசாணை முறைப்படி நடைமுறைக்கு வந்துள்ளது.  

அஞ்சலில் அனுப்பும் முறை நிறுத்தம்: இதுநாள் வரை நடைமுறையில் இருந்த, பிளாஸ்டிக் கார்டுகளாக ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை அச்சிட்டு அஞ்சல் மூலம் பயனாளர்களின் முகவரிக்கு அனுப்பும் முறை 12.09.2026 உடன் முழுமையாக நிறுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக, முழுமையான மின்னணு மயமாக்கப்பட்ட புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.  

அன்றைய தினமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்: வாகனம் பதிவு செய்த நாளோ அல்லது ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாளோ, அன்றைய தினமே பொதுமக்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை இணையவழியில் சுயமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சான்றிதழ்களை முதல் ஒரு வருட காலத்திற்கு முற்றிலும் இலவசமாகப் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  

QR Code மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்: பதிவிறக்கம் செய்யப்படும் அனைத்து மின்னணு ஆவணங்களிலும் QR Code பொறிக்கப்பட்டிருக்கும். இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், அரசுத் தரவுத்தளத்தில் உள்ள மூல ஆவணத்துடன் நிகழ்நேரத்தில் (Real-time verification) ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் போலியான ஆவணங்கள் புழங்குவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், இவ்வாவணங்கள் மத்திய அரசின் 'm-Parivahan' மற்றும் 'DigiLocker' வசதிகளுடனும் இணைக்கப்படும்.  

லேமினேஷன் நகல் செல்லும்: டிஜிட்டல் வடிவில் பதிவிறக்கம் செய்த ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பொதுமக்கள் சாதாரண காகிதத்திலோ அல்லது லேமினேஷன் செய்தோ வைத்துக்கொள்ளலாம். அதில் உள்ள QR குறியீடு தெளிவாகத் தெரியும் பட்சத்தில், அத்தகைய நகல்கள் அனைத்துப் பயன்பாடுகளுக்கும் செல்லும். இனிவரும் காலங்களில், முந்தைய பழைய அட்டை வடிவிலான அசல் ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தக் கூடாது என அரசாணையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை செய்யும் போது, விதிமீறல்கள் அல்லது அபராதங்கள் குறித்த பதிவுகளும் நிகழ்நேரத்தில் மின்னணு முறையிலேயே பதியப்படும்.  

இ-சேவை மையங்கள் மூலமாக பிரிண்ட் எடுக்கும் வசதி: சொந்தமாக ஸ்மார்ட்போன் அல்லது பிரிண்டர் வசதி இல்லாத பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் மூலமாக உரிய கட்டணத்தைச் செலுத்தி, இந்த ஆவணங்களை அச்சிட்டுப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் 15.09.2026 முதல் செயல்படுத்தப்படும்.  

இத்திட்டத்தை எவ்வித இடர்ப்பாடுகளுமின்றி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த, தேசியத் தகவலியல் மையம் (NIC) மூலமாக பரிவாகன் இணையதளத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) முன்னோட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் போக்குவரத்து ஆணையருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu