• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்

TN BharatNet Subsidy: தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் இயங்கும் டிஜிட்டல் பாரத் நிதி (DBN), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (TANFINET) ஆகியவற்றுக்கு இடையே, கிராமப்புற இணைப்புக்காக பாரத்நெட் வலையமைப்பைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம், வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியின் சஞ்சார் பவனில் கையெழுத்தானது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 31, 2026, 10:22 AM IST|Updated: Oct 31, 2026, 10:31 AM IST
joinshare
தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
Image Credit: Representative - AI / TN BharatNet Subsidy

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை ESIC அலுவலகத்தில் வேலை, சூப்பரான சம்பளம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை ESIC அலுவலகத்தில் வேலை, சூப்பரான சம்பளம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2

சென்ட்ரல் டூ அரக்கோணம், திருவள்ளூர்! மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்

3

தேனியை தொடர்ந்து கோவை சிறையிலும் கைதி எஸ்கேப்.. என்னதான் பிரச்சனை?

4

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! ஈமச்சடங்கு நிதியுதவி உயர்வு

5

ஹர்திக் பாண்டியா வேண்டாம்? பின்வாங்கும் CSK! என்ன காரணம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் (ABP) கீழ், தமிழ்நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீட்டு ஃபைபர் இணைப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் பிராட்பேண்ட் அணுகலை விரிவுபடுத்துவதும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும்  இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

டெல்லியில் கையெழுத்தான ஒப்பந்தம்

தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் இயங்கும் டிஜிட்டல் பாரத் நிதி (DBN), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (TANFINET) ஆகியவற்றுக்கு இடையே, கிராமப்புற இணைப்புக்காக பாரத்நெட் வலையமைப்பைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம், வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியின் சஞ்சார் பவனில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டில் உள்ள 4,767 கிராமங்களுக்கு தேவைக்கேற்ப பிராட்பேண்ட் இணைப்பு வழங்கவும் வழிவகை செய்கிறது. மத்திய அரசின் நிதியுதவியானது, கடைசி மைல் வலையமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்தவும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கையெழுத்து விழா, டிஜிட்டல் பாரத் நிதியின் நிர்வாகி ஷ்யாமல் மிஸ்ரா முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், காணொளிக் காட்சி மூலம் இதில் கலந்துகொண்டார். பாரத் சஞ்சார் நிகம் (BSNL), டான்ஃபிநெட், தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் டிபிஎன் ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

மேலும் படிக்க | Tamil Nadu Live Update : காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம், மகளிர் உரிமைத்தொகை, தங்கம் விலை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

ஐந்து லட்சம் கிராமப்புறக் குடும்பங்கள் பயனடையும்

  • இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீட்டு ஃபைபர் இணைப்புகளை ஏற்படுத்த உதவும்.
  • இதன் மூலம் குடும்பங்கள் அதிவேக பிராட்பேண்ட் சேவைகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விரிவாக்கப்பட்ட இந்த வலையமைப்பு, மின்-ஆளுமை, இணையவழிக் கல்வி, தொலைமருத்துவம், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் பிற குடிமக்கள் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட பல டிஜிட்டல் சேவைகளை வழங்குவதை மேம்படுத்தும் என நம்பப்படுகின்றது.

4,767 கிராமங்களுக்கு தேவைக்கேற்ப இணைப்பு வழங்கும் ஏற்பாடு, கடைசி மைல் பிராட்பேண்ட் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, போதிய சேவை கிடைக்காத பகுதிகளுக்கு டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புற இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம்

தற்போதுள்ள பாரத்நெட் வலையமைப்பை மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 4, 2023 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வலுவான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற பிராட்பேண்ட் இணைப்பை உறுதி செய்வதையும், தேவைக்கேற்ப கிராமங்களுக்கும் இணைப்பை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தமானது, 'பாரத்நெட்' (BharatNet) உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கும் நிதி மானிய உதவியுடன், மாநில அரசின் தலைமையிலான மாதிரியின் மூலம் தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை விதிமுறையில் வரப்போகும் முக்கிய மாற்றம்

கிராமப்புற தொலைத்தொடர்பு விரிவாக்கத்தில் டிஜிட்டல் பாரத் நிதியின் பங்கு

முன்பு 'யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட்' (USOF) என்று அழைக்கப்பட்ட 'டிஜிட்டல் பாரத் நிதி', தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்திய தந்தி (திருத்தச்) சட்டம், 2003-ன் கீழ் நிறுவப்பட்டு, 2002 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த இந்த நிதி, தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் 'டிஜிட்டல் பாரத் நிதி' என மறுபெயரிடப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம், தொலைத்தொடர்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத கிராமப்புற, தொலைதூர மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அனைவருக்கும் தொலைத்தொடர்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.

'பாரத்நெட்' தவிர, 'டிஜிட்டல் பாரத் நிதி' பல்வேறு இணைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது. 4ஜி செறிவூட்டல் திட்டம் மற்றும் மொபைல் சேவைகள் பின்வரும் பகுதிகள் உள்லிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டுவரப்படும்:

  • மேம்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் சேவை கிடைக்காத பகுதிகள்,
  • தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், 
  • இமயமலை மற்றும் எல்லைப் பகுதிகள், 
  • தீவுகள் மற்றும் 
  • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்கள்

தமிழ்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட சமூகத்தையும், அறிவுசார் பொருளாதாரத்தையும் உருவாக்கும் அரசின் இலக்கை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, பின்தங்கிய கிராமங்கள், மலைப்பிரதேசங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் படிக்க | டாஸ்மாக் அதிரடி முடிவு: மதுபான கிளப்புகளுக்கான மானியம் ரத்து – நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu