• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மேட்ரிமோனி தளங்களில் இனி ஆதார் சரிபார்ப்பு: தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு

மேட்ரிமோனி தளங்களில் இனி ஆதார் சரிபார்ப்பு: தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு

மேட்ரிமோனி தளங்களில் இனி ஆதார் சரிபார்ப்புக்கு அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசு, போலி கணக்குகளைத் தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 26, 2026, 08:42 AM IST|Updated: Sep 26, 2026, 08:54 AM IST
joinshare
மேட்ரிமோனி தளங்களில் இனி ஆதார் சரிபார்ப்பு: தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு
Image Credit: Tamil Nadu matrimony Aadhaar verification

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருமணத் தகவல் இணையதளங்களில் போலிப் பெயர்களில் கணக்கு தொடங்கி நடைபெறும் ஆள்மாறாட்டங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் வகையில், பயனர்களின் அடையாளங்களை ஆதார் மூலம் சரிபார்க்கத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின் மூலம், பிரபல நிறுவனமான Matrimony.com Ltd தனது பயனாளர்களின் அடையாளங்களை ஆதார் சரிபார்ப்பு முறை மூலம் உறுதி செய்துகொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  

மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை:

இணையவழி திருமணத் தளங்களில் பதிவு செய்யப்படும் பயனர் விவரங்களின் நம்பகத்தன்மையை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) வழிகாட்டுதல்களின்படி, 'ஆம்/இல்லை' (Yes/No) மற்றும் 'இ-கேஒய்சி' (eKYC) சரிபார்ப்பு வசதிகள் பயன்படுத்தப்படும். இதன்மூலம் உண்மையான சுயவிவரக் கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு சரிபார்க்கப்பட்ட பயனர் குறியீடு (Verified User Indicator) வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

ஆதார் சரிபார்ப்பு கட்டாயமில்லை:

இந்த ஆதார் சரிபார்ப்பு நடைமுறை முற்றிலும் பயனாளர்களின் தன்னார்வ அடிப்படையில் (Voluntary Basis) மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நபரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெறாமல் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளக்கூடாது எனவும் அந்நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

மாற்று ஆவணங்கள் சமர்ப்பிக்க அனுமதி:

ஆதார் சரிபார்ப்புக்கு விருப்பம் தெரிவிக்காத அல்லது ஆதார் வழங்க இயலாத பயனாளர்களுக்கு எக்காரணம் கொண்டும் சேவையை மறுக்கக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கு மாற்றாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அடையாள ஆவணங்களை ஏற்றுக்கொண்டு சேவைகளைத் தடையின்றி வழங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:  

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்   
கடவுச்சீட்டு 
நிரந்தர கணக்கு எண் அட்டை

அரசாணை வெளியீடு மற்றும் அமல்:

தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் திருமதி மு. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசிதழில் (Tamil Nadu Government Gazette) வெளியிட்டுள்ளார். இந்த வழிகாட்டுதல்கள் அரசாணை வெளியான நாளிலிருந்தே உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் மூலம் திருமண வரன் தேடும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் இணையதள மோசடிகளிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், பாதுகாப்பான தள சூழல் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu