SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

Tamil Nadu Government : புறம்போக்கு நில வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) இன்றி மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுளது

Written By Karthikeyan Sekar
Published: Oct 09, 2026, 02:47 PM IST | Updated: Oct 09, 2026, 02:53 PM IST
Join

தமிழ்நாட்டில் உள்ள நத்தம் மற்றும் இதர ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் நீண்ட காலமாக மின் இணைப்பு கோரி அரசுக்கு கோரிக்கைகளையும் மனுக்களையும் அனுப்பி வந்தனர். இந்நிலையில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த 06.07.2026 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் பரிந்துரைகளை ஏற்று, தமிழக அரசு இது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது.  

புதிய அரசாணையின் சிறப்பம்சங்கள்

எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் வெளியிட்டுள்ள அரசாணையின் படி, அரசு அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் தடையில்லா சான்றிதழ் (NOC) இன்றியே வீட்டு உபயோக மின் இணைப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட அதிகபட்சம் 250 சதுர அடி பரப்பளவுக்குள் உள்ள வீடுகளுக்கு மட்டுமே வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்கப்படும்.  

புதிய கட்டணப் பிரிவு அறிமுகம்

இத்தகைய இணைப்புகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும், மின் வாரியத்தின் மூலம் "Low Tension Tariff IA(3) - Poramboke" என்ற புதிய பிரத்யேக கட்டணப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு புதிய மின் இணைப்புகள் உடனடியாக வழங்கப்படும்.  

யாருக்கெல்லாம் இந்த மின் இணைப்பு கிடைக்காது?

அரசாணையில் சில குறிப்பிட்ட மற்றும் ஆட்சேபனைக்குரிய இடங்களுக்குத் தெளிவான விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வரும் நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது:  

நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள்

மேய்க்கால், மந்தைவெளி மற்றும் மேய்ச்சல் தரைப் புறம்போக்குகள்  

காப்புக்காடுகள் என அறிவிக்கப்படாத வனப் புறம்போக்கு நிலங்கள் உட்பட அனைத்து வனப் பகுதிகள்  

ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ரயில்வே நிலங்கள் மற்றும் பாசறைப் பகுதிகள்

'தமிழ் நிலம்' இணையதளப் பதிவேடுகளின்படி மத நிறுவனங்களின் பட்டா நிலங்கள் மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்கள்  

தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு

இத்திட்டம் உரிய ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே சென்று சேர்வதை உறுதி செய்யவும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் விரிவான கண்காணிப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, தாலுகா வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் எத்தனை புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES