SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

Tamil Nadu Government : விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க தமிழக அரசு வழங்கும் 70% வரை மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 09, 2026, 01:35 PM IST | Updated: Oct 09, 2026, 01:45 PM IST
Join

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு உட்பட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசன வசதியை மேம்படுத்தவும், விவசாயிகளின் சாகுபடிச் செலவைக் குறைத்து வருமானத்தை உயர்த்தவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மானியம் எவ்வளவு கிடைக்கும்?

பொதுப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, மின் மோட்டார் பம்புசெட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 வரை மானியமாக வழங்கப்படும்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்குச் சிறப்புச் சலுகையாக, வழக்கமான 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம், அதாவது ரூ.6,000/- வரை சேர்க்கப்பட்டு, மொத்தமாக 70 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.21,000/- வரை, இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயன்கள் மற்றும் தகுதிகள்:

அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பு: தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயன்பாட்டு விதம்: மின் இணைப்புடன் புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுகளில் மின் மோட்டார் பொருத்துவதற்கும், அல்லது ஏற்கனவே உள்ள திறன் குறைந்த பழைய பம்புசெட்டுகளுக்கு மாற்றாகப் புதிய ஆற்றல் வாய்ந்த மின் மோட்டார் பம்புசெட்டுகளைப் பொருத்துவதற்கும் இம்மானியம் வழங்கப்படும்.

தரமான உபகரணங்கள்: வேளாண்மைப் பொறியியல் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட, 4 நட்சத்திரக் குறியீட்டிற்கு குறையாத தரமான மின் மோட்டார் பம்புசெட்டுகளை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத் தேர்வு செய்துகொள்ளலாம்.

நுண்ணீர்ப் பாசன இணைப்பு: தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்பு சொட்டு நீர் / தெளிப்பு நீர் அமைத்தவர்கள் அல்லது புதிதாக அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம். மேலும், அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து தங்களின் விருப்பத்தை எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES