SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

Tamil Nadu Government : திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் ரூ.2 லட்சம் வரை அதிரடி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 09, 2026, 05:21 PM IST | Updated: Oct 09, 2026, 05:26 PM IST
Join

Tamil Nadu Government : தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைப்பது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் பணியாளர்களின் பணிநலன் மற்றும் சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

2026-27 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, சட்டப்பேரவையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமணக் கடன் தொகை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக தற்போது அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

முன்பு வழங்கப்பட்ட திருமணக் கடன் விவரம்

இதற்கு முன்பு வரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணச் செலவுகளுக்காக மிகக் குறைந்த அளவிலேயே திருமணக் கடன் உதவி வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, ஆண் பணியாளர்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண் பணியாளர்களுக்கு ரூ.10,000 என்ற அளவிலேயே கடன் தொகை அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்கால பொருளாதாரச் சூழல் மற்றும் திருமணச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

பல மடங்கு உயர்த்தப்பட்ட புதிய கடன் தொகை

* வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையின்படி, திருக்கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் தொகை பல மடங்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது:  

* முதுநிலைத் திருக்கோயில் பணியாளர்கள்: இவர்களுக்கு திருமணக் கடன் தொகையாக ரூ.2 இலட்சம் வரை வழங்கப்படும்.  

* முதுநிலை அல்லாத திருக்கோயில் பணியாளர்கள்: இவர்களுக்கு திருமணக் கடன் தொகையாக ரூ.1 இலட்சம் வரை வழங்கப்படும்.  

கடன் திரும்பச் செலுத்தும் முறை மற்றும் விதிமுறைகள்

இந்த உயர்த்தப்பட்ட திருமணக் கடன் தொகையானது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களுக்கும் பொருந்தும். அரசு ஊழியர்களுக்கான விதிகளின் அடிப்படையில், இக்கடன் தொகை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 36 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் நலனில் தொடர் முன்னெடுப்புகள்

திருக்கோயில் பணியாளர்களின் குடும்பப் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் பணிநலனை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பிற்கான பணப்பலன், மகப்பேறு விடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருமணக் கடன் தொகையும் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது கோயில் பணியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு - தமிழ்நாடு அரசு முக்கிய தேதி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES