SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9000 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government PM Internship Scheme Announcement: 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9000 ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 15, 2026, 08:54 AM IST | Updated: Oct 15, 2026, 08:59 AM IST
Join

Tamil Nadu Government PM Internship Scheme Announcement: 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் (Internship) வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை சார்ந்த நிஜமான வணிக சூழலை அவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்.

இப்பயிற்சி திட்டத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 முன்னனி நிறுவனங்களில், ஒரு கோடி நபர்களுக்கு நிறுவனங்களின் சூழ்நிலையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 18 முதல் 25 ஆகும். இப்பயிற்சி 6 மாதம் முதல் 9 மாதம் வரை வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பாலிடெக்னிக், இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதிவுடையவர்கள் ஆவர்.

மேலும், இப்பயிற்சி காலத்தில் மாதம்தோறும் 9000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றன. இதில் அரசு 8100 ரூபாயும், நிறுவனங்கள் 900 ரூபாயும் வழங்குகின்றன. இவை மட்டுமின்றி நிறுவனங்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து தங்குமிடம் மற்றும் பயணம் உள்ளிட்ட கூடுதல் உதவிகளை வழங்கலாம். மேலும் பயிற்சி காலத்தில் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கூடுதல் உதவித்தொகை ரூபாய் 6000 இரண்டு தவணைகளாக வழங்கப்படுகின்றன. முதல் தவணை பயிற்சியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளும், அடுத்த தவணை மூன்று மாதங்களுக்குப் பிறகும் வழங்கப்படுகின்றன. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.37... தவெக அரசு ஏன் இவ்வளவு விலை கொடுக்கிறது? Explained

குடும்ப ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர முழு நேரம் பணிபுரிபராகவோ அல்லது கல்வி பயில்பவராக இருத்தல் கூடாது. மத்திய / மாநில அரசின் கீழ் ஏதேனும் திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி பணி அல்லது பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களாக இருத்தல் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசு ஊழியராக (சுயம், வாழ்க்கை துணை மற்றும் பெற்றோர்) இருக்கக் கூடாது. மேலும் இப்பபயிற்சியில் சேர விரும்பும் தகுதியான இளைஞர்கள் https://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இப்பயிற்சியில் பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு திருவாரூர் மாவட்ட திறன் அலுவலரை 9944186027 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் மாவட்ட திறன் மையத்தை நேரில் அணுகுமாறும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மின்சார கொள்முதல் சர்ச்சை: நீக்கப்பட்ட ஒரு பதிவு... தமிழக அரசியலில் வெடித்த புதிய விவாதம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES