சென்னை: மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! 2027-28 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான நலத்திட்டப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதற்கான முன்னேற்பாட்டை அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக காலணிகள், காலுறைகள், மழைக்கோட்டுகள் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்களை வாங்குவதற்கு, மொத்தம் ரூ. 52.05 கோடி மதிப்பிலான நான்கு ஒப்பந்தப்புள்ளிகளை (tenders) தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamil Nadu Textbook and Educational Services Corporation- TNTB&ESC) சார்பில் இந்த டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த மழைக்கோட்டுகள் வழங்கப்படும்.
குறைந்த வெப்பநிலை நிலவும் மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 2.42 கோடி மதிப்பிலான நான்காவது ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.