தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ், ஸ்வெட்டர், ரெயின்கோட்: அரசு டெண்டர் வெளியீடு
Tamil Nadu Government: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக காலணிகள், காலுறைகள், மழைக்கோட்டுகள் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்களை வாங்குவதற்கு, மொத்தம் ரூ. 52.05 கோடி மதிப்பிலான நான்கு ஒப்பந்தப்புள்ளிகளை (tenders) தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
சென்னை: மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! 2027-28 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான நலத்திட்டப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதற்கான முன்னேற்பாட்டை அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக காலணிகள், காலுறைகள், மழைக்கோட்டுகள் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்களை வாங்குவதற்கு, மொத்தம் ரூ. 52.05 கோடி மதிப்பிலான நான்கு ஒப்பந்தப்புள்ளிகளை (tenders) தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamil Nadu Textbook and Educational Services Corporation- TNTB&ESC) சார்பில் இந்த டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | TN Shutdown: தமிழகத்தில் நாளை (நவ., 13) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட்!
ஒவ்வொரு டெண்டருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?
- காலணிகள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலணிகளை வாங்குவதற்காக, முதல் டெண்டர் ரூ. 37.24 கோடி மதிப்பீட்டில், வெளியிடப்பட்டுள்ளது.
- காலுறைகள்: காலணிகளுடன் சேர்த்து வழங்குவதற்கான காலுறைகளை வாங்குவதற்காக, இரண்டாவது டெண்டர் ரூ. 9.7 கோடி மதிப்பீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
- ரெயின்கோட்கள்: மலைப்பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மழைக்காலங்களில் சிரமமின்றி பள்ளிகளுக்கு செல்ல ரெயின்கோட்களை வழங்க மூன்றாவது டெண்டர் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் 91,771 மழைக்கோட்டுகள் 28,30,32 மற்றும் 34 இன்ச் ஆகிய அளவுகளில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- ஸ்வெட்டர்கள்: மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர்களை வழங்க, நான்காவது டெண்டர் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் ரெயின்கோட்கள் விநியோகிக்கப்படும்?
கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த மழைக்கோட்டுகள் வழங்கப்படும்.
கம்பளி ஸ்வெட்டர்களுக்கான டெண்டர் மதிப்பு எவ்வளவு?
குறைந்த வெப்பநிலை நிலவும் மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 2.42 கோடி மதிப்பிலான நான்காவது ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ராஜீவ்-க்கு துரோகமா..? கைநடுங்கிய சோனியா காந்தி.. கருணாநிதிக்கு பறந்த போன் கால்!