CM Vijay UK Visit: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஒரு வாரக் கால சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட அவர், செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதே முதலமைச்சர் விஜய்யின் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் செய்திகுறிப்பில், "இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் இந்த உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன்… pic.twitter.com/HTGKB67XPe— TN DIPR (@TNDIPRNEWS) September 14, 2026
அதேபோல், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்திருப்பதாகவும், இதையொட்டி தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் கார்ல்சன் மற்றும் ஸ்ரியா சொல்யூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இங்கிலாந்து லண்டன் நகரில் இன்று (செப். 14), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி… pic.twitter.com/MxvrR5zzUX
— TN DIPR (@TNDIPRNEWS) September 14, 2026
இந்த வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் றுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions)… pic.twitter.com/rUuL2ZB1lY
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 14, 2026
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் ன்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் கியோரால் கையெழுதிடப்பட்டு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026)அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா… pic.twitter.com/0p8vHHIpLY
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 14, 2026
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடைபெற்ற லீ மேன்ஸ் கார் பந்தயத்தை கடந்த செப். 12ஆம் தேதி அன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். அந்த பந்தயத்தில் நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்றிருந்தார்.
— Vijay (@actorvijay) September 14, 2026
அப்போது முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் உதவியாளர்கள் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் உடன் சென்றனர். அப்போது நடிகை திரிஷாவும் ரேஸ் பார்க்க வந்திருந்தது வைரலாகி இருந்தது.