• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அறிவிப்பு

காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அறிவிப்பு

Tamil Nadu Govt : பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி என்ற முதலமைச்சர் அறிவிப்பை நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 09, 2026, 01:33 PM IST|Updated: Nov 09, 2026, 01:38 PM IST
joinshare
காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அறிவிப்பு
Image Credit: Tamil Nadu police Rs 1 crore compensation

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

2

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

3

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

4

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

5

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Govt : காவல்துறை குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து மிகப்பெரிய குட்நியூஸ் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பணியின் போது, அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி உயிர்த்தியாகம் செய்யும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சிறப்பு இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. உள் துறை முதன்மைச் செயலாளர் இந்த அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | அண்ணன் சீர் திட்டம் முக்கிய அறிவிப்பு! டெண்டர் வெளியீடு - முக்கிய தேதிகள், நிபந்தனைகள் முழு விவரம்

சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு 

2026–2027 ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "தமிழ்நாடு காவல்துறையில், பணியின்போது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி உயிர்த்தியாகம் செய்த காவல்துறையினரை சிறப்பிக்கும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்கப்படும்" என அறிவிப்பு எண் 5ன் கீழ் அறிவிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முழுமையாகச் செயல்படுத்தும் விதமாகவே தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

காவல்துறையின் மன உறுதியை உயர்த்த புதிய நடைமுறை

ஏற்கனவே இத்தகைய வீரச்செயல்களில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து (CMPRF) ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், காவல்துறையினரின் மன உறுதியை மேலும் அதிகரிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலை ஊக்குவிக்கவும், இந்த இழப்பீட்டுக்கெனத் தனி நடைமுறை தேவை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அரசிற்குத் திட்ட முன்மொழிவு அனுப்பியிருந்தார். காவல்துறை தலைமை இயக்குநரின் இந்த பரிந்துரையை முழுமையாகப் பரிசீலித்த தமிழக அரசு, அதனை ஏற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையை முறைப்படுத்தியுள்ளது.  

ஆண்டுதோறும் ரூ.2 கோடி தொடர் நிதி ஒதுக்கீடு

துணிச்சலான சூழ்நிலைகளில் சட்ட ஒழுங்கு பணிகளை ஆற்றும்போது உயிரிழக்கும் காவலர் குடும்பங்களுக்கு ஒரு கோடி வழங்கும் திட்டத்திற்காக, தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய இந்த அரசாணையில் அரசு அனுமதி அளித்துள்ளது. இச்செலவினத்திற்காகக் காவல்துறை நலன் பிரிவின் கீழ் புதிய கணக்குத் தலைப்பும் உருவாக்கப்பட்டு, நிதித் துறையின் ஒப்புதலுடன் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உயிரைப் பணயம் வைத்து சமூக அமைதியையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் நிலைநாட்டும் காவலர்களின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்குப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu