• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி! சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி! சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Tamil Nadu Government Employees : அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 12, 2026, 08:44 AM IST|Updated: Sep 12, 2026, 08:49 AM IST
joinshare
அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி! சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
Image Credit: Tamil Nadu Government Employees

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government Employees : தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், ஊழலைத் தடுக்கவும் அரசு ஊழியர்கள் தங்களின் ஆண்டு சொத்து மற்றும் கடன் விவரங்களை இணையவழியில் தாக்கல் செய்வதை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அகில இந்தியப் பணி அதிகாரிகளைத் தவிர்த்து, மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IFHRMS போர்ட்டல் மூலம் ஆன்லைன் தாக்கல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு போர்ட்டல் வாயிலாக இந்தச் சொத்து விவரப் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான பிரத்யேக வசதி தற்போது IFHRMS இணையதளத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொத்து மற்றும் கடன் விவரங்கள்

அரசு ஊழியர்கள் தாங்கள் வைத்துள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். நிலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அசையாச் சொத்துகள். ரொக்கப் பணம், வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் நிரந்தர வைப்புத் தொகைகள். தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்கள். கார், இருசக்கர வாகனங்கள் போன்ற அசையும் சொத்துகள்.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்கள்

டிசம்பர் 31, 2025 நிலவரப்படியான சொத்து மற்றும் கடன் விவரங்களை, வரும் அக்டோபர் 31, 2026க்குள் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் இணையவழியில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் உயர்நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யத் தவறினால் பதவி உயர்வுக்கு வேட்டு

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும். சொத்துக் கணக்கு தாக்கல் செய்த தேதி மற்றும் விவரங்கள் ஊழியரின் ஆண்டறிக்கை ரகசியக் கோப்பில் கட்டாயமாகப் பதிவு செய்யப்படும். உரிய காலத்திற்குள் விவரங்களைத் தராவிட்டால், அது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறிய குற்றமாக கருதப்படும்.

ஊழியர்களுக்கான பணி உயர்வு பரிசீலனைப் பட்டியலின்போது இந்தச் சொத்துக் கணக்கு விவரங்கள் முதன்மையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் கணக்கு காட்டாதவர்களுக்குப் பதவி உயர்வு தடைபட வாய்ப்புள்ளது.

தொடர் கண்காணிப்பு

சொத்து விவரங்களை இணையவழியில் சேகரிப்பது ஊழல் தடுப்பு நடவடிக்கையின் முதல்படி மட்டுமே ஆகும். சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை முறையாகத் தணிக்கை செய்தல், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார்களா என்பதை கள ஆய்வின் மூலம் கண்டறிதல் மற்றும் தவறிழைப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தல் ஆகியவையே இந்நடவடிக்கையின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu