• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழக ஜிஎஸ்டி வருவாய் சர்ச்சை: திமுகவின் குற்றச்சாட்டும் தவெக அரசின் விளக்கமும் Explained

தமிழக ஜிஎஸ்டி வருவாய் சர்ச்சை: திமுகவின் குற்றச்சாட்டும் தவெக அரசின் விளக்கமும் Explained

2026 அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் 3.2% மட்டுமே என திமுக விமர்சித்துள்ள நிலையில், வரிப் பங்கீட்டிற்கு பின் வருவாய் 8% அதிகரித்துள்ளதாக தவெக அரசு விளக்கம் அளித்துள்ளது. பின்னணி மற்றும் புள்ளிவிவரங்கள் இதோ...

Written BySudharsan G
Published: Nov 03, 2026, 11:38 PM IST|Updated: Nov 03, 2026, 11:51 PM IST
joinshare
தமிழக ஜிஎஸ்டி வருவாய் சர்ச்சை: திமுகவின் குற்றச்சாட்டும் தவெக அரசின் விளக்கமும் Explained
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழக ஜிஎஸ்டி வருவாய் சர்ச்சை: திமுகவின் குற்றச்சாட்டும் தவெக அரசின் விளக்கமும் Explained

தமிழக ஜிஎஸ்டி வருவாய் சர்ச்சை: திமுகவின் குற்றச்சாட்டும் தவெக அரசின் விளக்கமும் Explained

2

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு... 2 மணிநேரம்தான் அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

3

துரைமுருகன் பதவி விலகணும்... திமுகவை காப்பாற்ற எழுத்தாளர் சொன்ன முக்கிய பாயிண்ட்

4

சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?

5

Explained | அமெரிக்க இடைத்தேர்தல் 2026 முடிவுகள் எப்போது? யார் கைப்பற்றுவார்கள் காங்கிரஸை?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசியல் பரப்பில் தற்போது விவாதப் பொருளாக மாறியிருப்பது ஜிஎஸ்டி வரி வருவாய்தான். 2026 அக்டோபர் மாதத்தில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது என பிரதான எதிர்கட்சியான திமுக விமர்சித்துள்ளது.

அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளதாக ஆளும் தவெக அரசு விளக்கம் அளிக்கிறது. இந்த விவாதத்தின் பின்னணி என்ன?, திமுக சொல்வது என்ன? தவெக விளக்கம் என்ன? புள்ளிவிவரங்களுடன் இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | உயரப்போகும் பால் விலை? லிட்டருக்கு ரூ.5 உயர்வா? ஆவின் நிர்வாகம் எடுத்த முடிவு!

திமுகவின் விமர்சனம்

  • அக்டோபர் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
  • முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி என்பது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
  • அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி மூன்று சதவீதம் மட்டுமே சுட்டுக்காட்டிய தங்கம் தென்னரசு, இதே காலகட்டத்தில் தெலங்கானாவில் 14%, கர்நாடகாவில் 18%, கேரளா 23%, ஆந்திரா 24% வளர்ச்சி பதிவாகி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
  • மேலும், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சியை வலுப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.

— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) November 2, 2026

தவெக அரசின் பதில் என்ன?

  • திமுகவின் விமர்சனத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார். அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி எதிர்மறை (Negative) நிலையில் இருந்து நேர்மறையாக (Positive) 3.2% ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
  • மத்திய அரசு உடனான வரிப் பங்கீட்டுக் கணக்கீடுகளக்குப் பிறகு தமிழகத்திற்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் அக்டோபரில் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வருவாய், வரிப் பங்கீட்டுக்குப் பிறகு 15% வளர்ச்சி அடைந்துள்ளதாக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி. லோகேஷ் தமிழ்செல்வனும் தெரிவித்திருந்தார்.
  • அதாவது, மொத்த ஜிஎஸ்டி வசூலை மட்டும் வைத்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மதிப்பிட முடியாது என்பதே அரசின் வாதமாகும்.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார். இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.

— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) November 3, 2026

Gross GST, Post Settlement GST என்றால் என்ன?

திமுக விமர்சனத்தையும், தவெக விளக்கத்தையும் புரிந்துகொள்ள முதில், மொத்த ஜிஎஸ்டி (Gross GST), வரிப் பங்கீட்டுக்கு பிறகான ஜிஎஸ்டி வருவாய் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

Gross GST: மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாயே இது. இதில் மாநில ஜிஎஸ்டி (SGST), மத்திய ஜிஎஸ்டி (CGST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ஆகியவை அடங்கும்.

Post-Settlement GST: மாநிலத்திற்குச் சொந்தமாகக் கிடைக்கும் SGST வருவாய் உடன், மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் IGST பங்கீட்டையும் கணக்கில் கொண்ட வருவாயே இது.

IGST என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. மத்திய அரசின் வரி பங்கீட்டுச் செயல்முறைக்கு பிறகே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான தொகை ஒதுக்கப்படுகிறது.

எனவே, மொத்த வசூல் வளர்ச்சியும் மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாய் வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் படிக்க | டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு! FL2 லைசென்ஸ் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு

புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

  • கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ரூ.11,298 கோடியாகும்.
  • அதுவே, 2026 அக்டோபர் மாதத்தில் இது ரூ.11,661 கோடியாக அதிகரித்துள்ளது.
  • அதாவது ஓராண்டில் ரூ.363 கோடி உயர்ந்துள்ளது, வளர்ச்சி விகிதம் சுமார் 3.2% ஆகும்.
  • இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2026 அக்டோபரில் 22.9% அதிகரித்து ரூ.2.31 கோடியை எட்டியுள்ளது. ஆனால், தேசிய வளர்ச்சி விகிதத்தில் இறக்குமதி வருவாயின் அதிகரிப்பும் அடங்குகிறது.
  • மாநிலங்களின் வளர்ச்சியை ஒப்பிடும்போது உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாயைக் கொண்டு ஒப்பிடுவதே பொருத்தமானதாக இருக்கும். அந்த கணக்கிலும் தமிழ்நாட்டின் 3.2% வளர்ச்சி என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது...

அக்டபோர் மாதத்தில் மொத்த உள்நாட்டு GST வசூல் வளர்ச்சி 3.2% மட்டுமே என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் உறுதியாகிறது.

அதேநேரத்தில் தமிழக அரசின் தகவலின்படி, மத்திய அரசின் வரிப் பங்கீட்டுக்குப் பிறகு மாநிலத்திற்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் அக்டோபரில் 8% அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான இந்த காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 15% ஆக உள்ளது.

எனவே, திமுக சுட்டிக்காட்டும் மொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி குறைவு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதேசமயம், தவெக அரசு குறிப்பிடும் மாநிலத்திற்குக் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பும் கவனிக்கப்பட வேண்டியது.

ஆனால், ஒரு மாதத்தின் ஜிஎஸ்டி வசூலை மட்டும் வைத்து மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்க முடியாது. உற்பத்தி, முதலீடு, வேலைவாய்ப்பு, நுகர்வு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரக் குறியீடுகளையும், வருவாய் குறையீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிட முடியும்.

மேலும் படிக்க | பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டமும், பின்னணியும்? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer