SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மெகா மாற்றம்

Tamil Nadu Health Insurance Big Update: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டங்களை ஒன்றாக இணைக்கும் புதிய திட்டம் குறித்த அப்டேட்டை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 30, 2026, 09:24 AM IST | Updated: Oct 30, 2026, 09:37 AM IST
Join

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மருத்துவச் செலவுகளுக்குப் பெரும் அரணாக விளங்கும் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ மற்றும் மத்திய அரசின் ‘பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டம்’ (AB-PMJAY) ஆகியவற்றைத் தொடர்ந்து தடையின்றிச் செயல்படுத்துவதற்கான புதிய 5 ஆண்டு மெகா ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பைத் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | எங்கிருந்து வேண்டுமானாலும் சொத்துப் பதிவு: தமிழகப் பத்திரப்பதிவுத் துறையின் புதிய அப்டேட் Explained

இத்திட்டம் மற்றும் புதிய டெண்டர் குறித்த முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்பு விவரம்

அரசாங்கத் துறை: தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகம் (டி.எம்.எஸ் இணைப்பு கட்டடம், 3வது தளம், 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 006).  

திட்டக் காலம்: 11.01.2027 முதல் 5 ஆண்டுகளுக்கு அமலுக்கு வருகிறது.  

யார் பங்கேற்கலாம்?: மத்திய/மாநில அரசுகளின் பொதுத்துறை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இதில் அனுமதி இல்லை.  

டெண்டர் ஐடி (Tender ID): 2026_TNHSP_717642_1  

இணையதளம்: ஒப்பந்தப்புள்ளிகளை tntenders.gov.in என்ற அதிகாரப்பூர்வ அரசு தளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.  

ஒருங்கிணைந்த காப்பீடு: ஒரே கார்டு, இரட்டைப் பலன்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) ஆகிய இரண்டு திட்டங்களும் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2027 ஜனவரி 11 முதல் தொடங்கவுள்ள புதிய 5 ஆண்டுக் காலகட்டத்திலும் இத்திட்டம் அதே ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் தொடர்ந்து தடையின்றிச் செயல்படும்.  

இதன் மூலம் முதலமைச்சரின் மருத்துவ அட்டை மற்றும் ரேஷன் அட்டை வைத்துள்ள தகுதியான குடும்பங்கள், ஒரே தளத்தின் கீழ் மாநில மற்றும் மத்திய திட்டங்களின் பலன்களைத் தொடர்ந்து பெற முடியும்.

பொதுமக்களுக்குக் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

5 ஆண்டுகளுக்குத் தடையில்லா சிகிச்சை: தற்போது செயல்பட்டு வரும் காப்பீட்டு ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், முன்னதாகவே புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதனால் 11.01.2027-க்குப் பின்னரும் எந்தவிதச் சேவைத் தடையோ, தொழில்நுட்பத் தேக்கமோ இன்றி மக்கள் தொடர்ந்து சிகிச்சை பெற முடியும்.  

பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே: இந்த டெண்டர் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களான LIC, The New India Assurance, United India Insurance, National Insurance, Oriental Insurance போன்றவை மட்டுமே கோரப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் மட்டுமே பொறுப்பேற்பதால், சிகிச்சைகளுக்கான க்ளெய்ம்கள் நிராகரிக்கப்படுவது அல்லது தனியார் நிறுவனங்கள் போன்ற லாப நோக்கிலான கெடுபிடிகள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்களுக்கு நம்பகமான சேவை உறுதி செய்யப்படும்.  

பணமில்லா கட்டணமில்லா சிகிச்சை: இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை (கீமோதெரபி, கதிர்வீச்சு), சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைகள், கண் புரை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிகிச்சைகள் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் முழுமையாக இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் பாதுகாப்பு: ஏற்கனவே முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்துள்ளவர்கள் புதிய கார்டுகளுக்கு மீண்டும் அலையத் தேவையின்றி, இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழும் தானாகவே பலன்களைத் தடையின்றிப் பெற முடியும். 2027 ஜனவரி முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழக மக்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு இப்புதிய டெண்டர் நடைமுறையை முன்னெடுத்துள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES