• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ

OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ

Mumbai Indians: ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளர் குழுவை மொத்தமாக மாற்றி உள்ளது. பொல்லார்ட் தலைமையில் யார் யார் புதிதாக பயிற்சியாளர் குழுவுக்குள் வந்துள்ளனர் என்பதை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 30, 2026, 11:22 AM IST|Updated: Oct 30, 2026, 11:30 AM IST
joinshare
OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ
Image Credit: Mumbai Indians New Coaching Group | Images Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

2

'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

3

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சம்பளம் எவ்வளவு?

4

OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ

5

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் மழை, படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Mumbai Indians New Coaching Staffs, IPL 2027 : ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு அனைத்து அணிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. 6வது கோப்பைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பல மாற்றங்களை அணியில் செய்து வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு பயிற்சியாளர் குழுவே மொத்தமாக கலைக்கப்பட்டது.

சிஎஸ்கேவில் நடந்த மாற்றங்கள்

ஜாகீர் கான் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற நிலையில், உதவி பயிற்சியாளர்களாக கேரத் பேட்டி, ஆல்பி மார்கல் ஆகியோரும்; பந்துவீச்சு பயிற்சியாளராக மோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | பொல்லார்ட் திடீர் விலகல்? ஹெட்மையரை தட்டித் தூக்கிய MI கேப்டவுன்.. முழு விவரம்!

கடந்த சீசனில் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்ற உதவி பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம், பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் மட்டும் அணியுடன் தொடர்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலும் மாற்றம்

இந்நிலையில், சிஎஸ்கே அணியை போல், மும்பை இந்தியன்ஸ் அணியும் அதன் பயிற்சியாளர் குழுவை கலைத்தது. மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்த்தனே விலகிய நிலையில், பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்காவும் விலகினார்.

அதேபோல், பந்துவீச்சு பயிற்சியாளராக பாரஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளராக இருந்த கார்ல் ஹாப்கின்சன் ஆகியோரும் தற்போது அணியில் இருந்து விலகி உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர் குழு

சமீபத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியும் அதன் பயிற்சியாளர் குழுவை இன்று அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | CSK-வில் இருந்து துபே அவுட்? குறிவைக்கும் 3 அணிகள்.. பதிலுக்கு சிஎஸ்கே கேட்கும் தமிழக வீரர்!

பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா, பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் மெக்லெனகன், பீல்டிங் பயிற்சியாளராக டி. திலீப், மேம்பாட்டு பந்துவீச்சு பயிற்சியாளராக தவால் குல்கர்னி ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்துள்ளது.

Mumbai Indians today announced the appointment of Robin Uthappa as Batting Coach, Mitchell McClenaghan as Bowling Coach, T. Dilip as Fielding Coach and Dhawal Kulkarni as Development Bowling Coach for the upcoming IPL 2027 season. They will join Head Coach Kieron Pollard as part of a new-look coaching group that brings together a strong understanding of the Mumbai Indians culture, extensive international experience and a shared commitment to developing talent and delivering success. https://t.co/cA7yI5Khpk

— Mumbai Indians (@mipaltan) October 30, 2026

முன்னாள் MI வீரர்களின் சங்கமம்

பயிற்சியாளர் குழுவில் திலீப் தவிர அனைவருமே மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர்கள் ஆவர். பொல்லார்ட் 189 போட்டிகளிலும், மிட்செல் மெக்லெனகன் 56 போட்டிகளிலும், தவால் குல்கர்னி 35 போட்டிகளிலும், ராபின் உத்தப்பா 14 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு ஜூனில் இருந்து 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை டி திலீப் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் அணிகள் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். இதற்கு பிறகே எந்தெந்த வீரர்கள் மினி ஏலத்திற்கு வருவார்கள் என்பதும் தெரியவரும். டிசம்பர் 16ஆம் தேதி அன்று கோவாவில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா டிரேட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் பெற சிஎஸ்கே விரும்புவதாக தகவல்கள் வெளிவந்தன. ஒருவேளை அந்த டிரேட் நடந்தால் சிஎஸ்கேவில் இருந்து சில முக்கிய வீரர்களும் மும்பைக்கு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்கு டிரேட் செய்யப்படாவிட்டாலும் பிற அணிக்கு டிரேட் செய்ய வாய்ப்பிருக்கிறது. மும்பை அணி மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்ஸியை கொடுக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் சஞ்சு சாம்சனிடமோ அல்லது ஹர்திக் பாண்டியா வரும்பட்சத்தில் அவரிடமோ கேப்டன்ஷிப் வழங்கப்படலாம்.

மேலும் படிக்க | CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL