• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் மழை, படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் மழை, படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather: வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக தீவிரமாகத் தொடங்கியுள்ளதால், தென்மேற்கு பருவமழையின் போது இருந்த 16 சதவீத மழைப்பற்றாக்குறை ஈடுசெய்யப்பட்டு, மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு இயல்பான மழை அளவை எட்டியுள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 30, 2026, 10:52 AM IST|Updated: Oct 30, 2026, 10:58 AM IST
joinshare
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் மழை, படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Image Credit: Representative - AI / Tamil Nadu Weather

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

2

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சம்பளம் எவ்வளவு?

3

OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ

4

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் மழை, படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

5

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் 24வது தவணை வந்தாச்சு!! கணக்கில் பணம் வந்ததா? எப்படி செக் செய்வது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை: தமிழகத்தில் பருவமழையின் அடுத்த கட்டம் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அக்டோபர் 31-க்குள் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் மீண்டும் மழை

இதன்  காற்றழுத்த தாழ்வு மண்டல தாக்கத்தால், நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நவம்பர் 1,2,3-க்கான வானிலை முன்னறிவிப்பு

நவம்பர் 1

திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

நவம்பர் 2

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 3

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை தொடரும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க | Tamil nadu live Updates : தமிழ்நாடு அரசின் தீபாவளி போனஸ், முக ஸ்டாலின் கடும் விமர்சனம் - இன்றைய அப்டேட்ஸ்

கூடுதல் மழைப்பொழிவு

வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக தீவிரமாகத் தொடங்கியுள்ளதால், தென்மேற்கு பருவமழையின் போது இருந்த 16 சதவீத மழைப்பற்றாக்குறை ஈடுசெய்யப்பட்டு, மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு இயல்பான மழை அளவை எட்டியுள்ளது. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் (TNDRRA) தரவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஜூன் 1 முதல் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த மழைப்பொழிவு, இயல்பான அளவை விட 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. செப்டம்பர் 30 அன்று மழைப்பற்றாக்குறையுடன் இருந்த 23 மாவட்டங்களில், 18 மாவட்டங்கள் தற்போது இயல்பான அல்லது கூடுதல் மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழையே இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.

  • அக்டோபர் 1 முதல் 27 வரை, மாநிலத்தில் சராசரியாக 217.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
  • இது இயல்பான அளவான 144.2 மி.மீ-ஐ விட 51 சதவீதம் அதிகம். 
  • இந்த காலகட்டத்தில், மாநிலத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் இயல்பான, கூடுதல் அல்லது மிக அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
  • குறிப்பாக, அக்டோபர் மாதத் தொடக்கத்தில் அதிக மழைப்பற்றாக்குறையைக் கொண்டிருந்த மாவட்டங்களிலேயே மிகச் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 
  • திருப்பூர் -40%-லிருந்து +13%-க்கும், கள்ளக்குறிச்சி -29%-லிருந்து +2%-க்கும், ஈரோடு -32%-லிருந்து +6%-க்கும் மாறியுள்ளன.
  • நாகப்பட்டினம் -54%-லிருந்து -8%-க்கும், கரூர் -53%-லிருந்து -6%-க்கும் முன்னேற்றம் கண்டுள்ளன. 
  • திருச்சி (-39%-லிருந்து -7%), நாமக்கல் (-42%-லிருந்து -8%), மயிலாடுதுறை (-28%-லிருந்து -6%) மற்றும் நீலகிரி (-32%-லிருந்து -13%) ஆகிய மாவட்டங்களிலும் பற்றாக்குறை குறைந்துள்ளது, ஆனால் முழுமையாக நீங்கவில்லை.

மேலும் படிக்க | தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மெகா மாற்றம்

சென்னையில் 33% அதிக மழை

பல மாவட்டங்களில் அக்டோபர் மாதத்திற்கான இயல்பான அளவை விட அதிக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 289 மி.மீ மழை பெய்துள்ளது; இது அக்டோபர் மாதத்தின் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட இயல்பான அளவை விட 33% அதிகம்.

எனினும், மழை நீர் சேமிப்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்குள் பெய்யும் மழையின் அளவு, நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் உட்பட, வெவ்வேறு இடங்களில் கணிசமாக வேறுபடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், மழைப்பற்றாக்குறை குறைவதை மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்திலோ அல்லது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவிலோ நேரடி முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கருத முடியாது என தெரிவித்த அதிகாரிகள் மழை நீர் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் மழைப்பொழிவு நிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகின்றனவே தவிர, இந்த பருவத்திற்குத் தேவையான ஒட்டுமொத்த மழைப்பொழிவு பூர்த்தியாகிவிட்டது என்று அர்த்தமல்ல என்று வருவாய் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க |  சட்டவிரோத ரம்மி, பெட்டிங் ஆப்-களுக்கு ஆப்பு! தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu
Weather