• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் யூனியன் தேர்தலை நடத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. 18 நாட்கள் நடந்த உண்ணாநோன்பு மற்றும் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவும், வரும் நவம்பர் 2 முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Written ByShiva Murugesan
Published: Oct 30, 2026, 12:10 PM IST|Updated: Oct 30, 2026, 12:20 PM IST
joinshare
20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?
Image Credit: File / Ai | Delhi Jamia Millia Islamia News: ஜாமியாவில் Gen Z வெற்றி

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆயுஷ் டிப்ளமோ படிப்பில் சேர... கடைசி நாள் நீட்டிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

ஆயுஷ் டிப்ளமோ படிப்பில் சேர... கடைசி நாள் நீட்டிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

2

தண்ணீர் வீணாக்கினால் போலீஸ் கேஸ்? குடிநீரை வீணடித்தால் ரூ. 10000 அபராதம் -புனே மாநகராட்சி

3

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு: குடும்ப வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு

4

20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

5

'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர் யூனியன் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒருவழியாக நீக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்த பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர் யூனியனை மீண்டும் கொண்டுவர ஒப்புக்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்திய பல்கலைக்கழக வரலாற்றிலும், மாணவர் ஜனநாயகப் போராட்டங்களிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

18 நாட்கள் நடந்த தொடர் போராட்டம்

கடந்த அக்டோபர் தொடக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் நிர்வாகத்தால் நியமிக்கப்படும் "மாணவர் கவுன்சில்" முறையை உருவாக்க பல்கலைக்கழகம் முயற்சி செய்தது. ஆனால் AISA, NSUI மற்றும் SFI போன்ற மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஜனநாயகமற்ற முடிவை எதிர்த்தன. 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிறுத்தப்பட்ட முழுமையான ஜனநாயகத் தேர்தலே வேண்டும் என வலியுறுத்தி, நுழைவாயில் எண் 7 அருகே 5 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டத்தைத் தொடங்கினர்.

மாணவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை

பாதுகாப்புப் படையினர் மாணவர்களின் போராட்டத்தைக் கலைக்க நள்ளிரவில் கூடாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதும், மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்க உத்தரவுகளையும், வளாகத்திற்குள் நுழையத் தடைகளையும் விதித்தது. அதுமட்டுமில்லாமல் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களை டெல்லி காவல்துறை கைது செய்ததும் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது. 

மாணவர்களின் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் அளவுக்கு பல்கலைக்கழகம் முடங்கியது. அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டைத் தொடர்ந்து நிர்வாகம் வேறு வழியின்றி மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தது.

மேலும் படிக்க - இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாணவி! யார் இந்த நேஹா போரா?

ஜாமியா பல்கலைக்கழக போராட்டம் முடிவுக்கு வந்தது

ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒடுக்குமுறை முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. மாறாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகத் திரண்டனர். அவர்கள் பல்கலைக்கழக நுழைவாயில்களைக் கடந்து உள்ளே நுழைந்ததால், 18 நாட்களாக நீடித்த தீவிரமான போராட்டத்தால், மத்திய பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கியிருந்த நிலையில், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. துணைவேந்தர் மஜார் ஆசிஃப் மற்றும் பதிவாளர் மஹ்தாப் ஆலம் ரிஸ்வி ஆகியோர் நேரில் வந்து, மாணவர்களிடம் அதிகாரப்பூர்வ நிர்வாக உத்தரவை வாசித்துக் காட்டினர். இந்த அறிவிப்பு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பெரும் கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்தது. இது ஜாமியா பல்கலைக்கழகத்தின் 106-வது நிறுவன தினத்துடன் தற்செயலாக இணைந்து அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

புதிய மாணவர் யூனியனுக்கான சட்டத்திட்டங்கள் மே 15, 2027-க்குள் உருவாக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டு தொடங்கிய 6 வாரங்களுக்குள் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து நடவடிக்கை மற்றும் இடைநீக்க உத்தரவுகளும் நிபந்தனையின்றி வாபஸ் பெறப்படும்; மேலும் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 2, 2026) முதல் நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 

Jamia Millia Islamia University issues order accepting all three demands of the protesting students. The students' protest and hunger strike has hence been called off. 1. The approval and implementation of the Jamia Millia Islamia Students' Union Constitution shall be completed by 15th May, 2027. 2. Subsequent to the approval of the Constitution, the University shall release the notification for elections in accordance with the recommendations and guidelines of the Lyngdoh Committee. This date will be in accordance with the guidelines set forth by the Lyngdoh Committee Regulations. The elections shall be conducted within 6 weeks of the start of the academic session, that is approximately within 6 weeks from 16 July 2027. 3. All ongoing show-causes notices, disciplinary actions, rustications, suspensions and campus ban orders issued in connection with participation in the protest period shall be revoked.

— ANI (@ANI) October 29, 2026

 

ஜாமியா பல்கலைக்கழக கேம்பஸில் கொண்டாட்டம்

துணைவேந்தர் மஜார் ஆசிஃப் மற்றும் பதிவாளர் மஹ்தாப் ஆலம் ரிஸ்வி ஆகியோர் நேரடியாக வந்து அதிகாரப்பூர்வ உத்தரவை வாசித்துக் காட்டியதும், பல்கலைக்கழக வளாகமே கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஜாமியா பல்கலைக்கழகத்தின் 106-வது நிறுவன தினத்துடன் இணைந்து இந்த வெற்றியும் கிடைத்திருப்பது மாணவர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gen Z தலைமுறையின் இந்த ஒற்றுமையும் விடாமுயற்சியும் இந்திய மாணவர் சமூகத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் இது இந்தியாவில் மாணவர் ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள ஒரு மகத்தான வெற்றியாகும் என சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

#WATCH | Ebin Basil, a student who was on a hunger strike for the past 18 days, says, "This is a great victory for the students...This will be written in Golden words in Jamia's history and legacy." Rehan Mewati, a student who was on hunger strike for the last 15 days, says, "Truth has triumphed. This is the victory of students. I was on a hunger strike for the last 15 days. My health was deteriorating. But Jamia administration accepted our demands and sided with truth. We were fighting for truth. Inquilab Zindabad."

— ANI (@ANI) October 29, 2026

ஜாமியா மாணவர் போராட்டத்தின் முக்கிய அம்சங்கள்

விவரங்கள்

தகவல்கள்

பல்கலைக்கழகம்ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI), புது டெல்லி
போராட்டத்தின் காலம்18 நாட்கள் (அக்டோபர் 29 நள்ளிரவு நிறைவடைந்தது)
முக்கியக் கோரிக்கை2006-க்குப் பின் நிறுத்தப்பட்ட மாணவர் யூனியன் தேர்தலை மீண்டும் நடத்துவது
நிர்வாகத்தின் முடிவுமாணவர் யூனியன் அமைப்பிற்கும், மாணவர்கள் மீதான நடவடிக்கை ரத்துக்கும் சம்மதம்
வகுப்புகள் மீண்டும் தொடக்கம்நவம்பர் 2, 2026 (திங்கட்கிழமை முதல் நேரடி வகுப்புகள்)

மேலும் படிக்க - ஜாமியாவில் என்ன நடக்கிறது? தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் வெடித்த புதிய போராட்டம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi
Protest