• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ரேஷன் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள்: மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள்: மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Ration Shop Jobs : தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள முழு வழிகாட்டு நெறிமுறைகள் இங்கே விரிவாக பார்க்கலாம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 15, 2026, 09:28 IST|Updated: Nov 15, 2026, 09:37 IST
joinshare
ரேஷன் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள்: மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
Image Credit: Tamil Nadu Ration Shop Jobs

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Ration Shop Jobs : தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் (Ration Shops) நிலவும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், தகுதியான மகளிர் சுய உதவிக் குழு (SHG) உறுப்பினர்களைக் கொண்டு அப்பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்ப கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு நவம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ஜாக்பாட்: ரூ.50,000 உதவித்தொகை

பணியாளர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஏற்பாடு

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் கடந்த 31.08.2026 நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் (Packer) பணியிடங்களும் என மொத்தம் 1,890 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் காரணமாக, தற்போது பணியில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் பொது விநியோகத் திட்டப் பொருட்களைத் தடையின்றி விநியோகிப்பதில் நடைமுறைச் சிரமங்கள் உருவாகியுள்ளன.  

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (DRB) மூலம் முறையாகப் பணியாளர்களைத் தேர்வு செய்வது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதால், அப்பணி முடிவடையக் காலதாமதம் ஏற்படும். எனவே, அதுவரையிலான இடைப்பட்ட காலத்தில் பொது விநியோகத் திட்டப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு காலியாக உள்ள ரேஷன் கடைகளைத் தற்காலிகமாக நடத்த நிலையான செயல்முறை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தேவை ஏற்படும் நேர்வில், இல்லம் தேடிச் சென்று பொருட்களை விநியோகிக்கும் 'தாயுமானவர்' திட்டப் பணிகளிலும் இவர்களைத் தற்காலிகமாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

மாவட்ட அளவிலான தேர்வுக் குழு அமைப்பு

தகுதியான சுய உதவிக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கீழ்க்கண்ட அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது:  

தலைவர்: மாவட்ட ஆட்சித் தலைவர்  

உறுப்பினர்: மண்டல இணைப்பதிவாளர் (சென்னையைப் பொறுத்தவரை இணைப்பதிவாளர் - பொவிதி 1 & 2, சென்னை)  

உறுப்பினர்: திட்ட அலுவலர், மகளிர் திட்டம்  

சுய உதவிக் குழுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதிகள்

இந்தத் தற்காலிகப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்குக் கடுமையான தகுதி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:  

குழுவின் தகுதி: சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு பகுதியைச் சேர்ந்த குழுவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வரும், தரமதிப்பீடு (Grading) பெற்ற குழுவாக இருப்பது அவசியம். மேலும், வங்கிக் கடன் திருப்பிச் செலுத்துதலில் எவ்வித நிலுவையும் இல்லாமல், கூட்டங்கள், சேமிப்பு மற்றும் கணக்குப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கும் குழுக்களே கண்டறியப்பட வேண்டும்.  

கல்வித் தகுதி மற்றும் இருப்பிடம்: விற்பனையாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கடை அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.  

இதர நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது. அரசு அல்லது கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கனவே பணியில் இருப்பவராகவோ, சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர்கள் அல்லது பணியாளர்களின் நெருங்கிய உறவினராகவோ இருத்தல் கூடாது.  

பயிற்சி மற்றும் விண்ணப்ப நடைமுறை

தகுதியான உறுப்பினர்களிடம் இருந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு ரேஷன் கடை விற்பனை தொடர்பான அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும். பணியில் சேருவதற்கு முன்பாக, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் மூலம் வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியில் அவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இப்பயிற்சியில் விற்பனை முனைய இயந்திரம் (ePoS) இயக்கம், விரல் ரேகை மற்றும் கருவிழி அங்கீகாரம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட உரிமங்கள், இருப்பு மற்றும் விற்பனைப் பதிவேடுகள் பராமரிப்பு, தினசரி வசூல் தொகையைச் செலுத்துதல், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் நடத்தை விதிகள் குறித்து முழுமையாகக் கற்றுத்தரப்படும். பின்னர் இறுதிப் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.  

ஊதிய விவரம் மற்றும் முக்கிய நிபந்தனைகள்

தற்காலிகமாகப் பணியமர்த்தப்படும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.400 வீதம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக விற்பனையாளருக்கு ரூ.7,500-க்கும் மிகாமலும், கட்டுநருக்கு ரூ.6,600-க்கும் மிகாமலும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தால் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ஊதியம் செலுத்தப்படும்.  

அதேநேரம், இந்த ஒதுக்கீடு முற்றிலும் தற்காலிகமானது என்றும், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (DRB) மூலம் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பணி வரன்முறை, நிரந்தரப் பணி அல்லது முன்னுரிமை எதுவும் கோர மாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரத்தை உறுப்பினர்கள் வழங்க வேண்டும். மேலும், சங்கம் நிர்ணயிக்கும் பிணை வைப்புத் தொகையாக (Security Deposit) ரூ.10,000 மற்றும் ரூ.1,00,000-க்கான நம்பக உத்தரவாதக் காப்பீடு (Fidelity Guarantee) ஆகியவற்றைச் சம்பந்தப்பட்ட சங்கம் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மண்டல இணைப்பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொள்ளுமாறு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்குக் கூட்டுறவுத் துறை பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu