• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /காச நோய் - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

காச நோய் - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

நாமக்கலில் நடைபெற்ற காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அருண்ராஜ், தமிழக மக்களுக்கு இது குறித்த முக்கிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 29, 2026, 08:47 AM IST|Updated: Sep 29, 2026, 08:50 AM IST
joinshare
காச நோய் - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
Image Credit: Tamil Nadu TB Warning

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 820 மருத்துவ பயனாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த உடல் நிறை குறியீடு (Low BMI) கொண்ட மருத்துவ பயனாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவது அவர்களின் உடல்நல முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் காசநோயால் பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக Low BMI, உள்ள மருத்துவ பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாசம் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோயிலிருந்து குணமடைய வேண்டுமென்றால், 2 வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரைகளை தொடர்ந்து 6 மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அனைவரும் செய்யக்கூடிய தவறு என்னவென்றால்,மருந்துகளை ஓரிரு மாதங்கள் எடுத்து விட்டு, காய்ச்சல், இருமல் குறைந்து விட்டது என மருந்துகள் எடுப்பதை நிறுத்தி விடுவார்கள்.

கவனமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாத்திரைகளை முறையாகச் சாப்பிடத் தொடங்கிய ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் உங்கள் உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதைப் பார்த்துவிட்டு நோய் குணமாகிவிட்டது என்று நினைத்து மருந்துகளை நிறுத்திவிடாதீர்கள். பாதியிலேயே நிறுத்தினால் சில மாதங்களில் நோய் மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளது. அப்போது ஏற்கெனவே உட்கொண்ட மாத்திரைகள் உடலில் வேலை செய்யாமல் போகலாம். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை ஒருமுறை பாதியிலேயே நிறுத்திவிட்டால், அப்போதைக்கு உடல்நிலை சீராகிவிட்டது போல் தோன்றலாம்.

ஆனால், அவ்வாறு மருந்துகளைத் தன்னிச்சையாக நிறுத்தும் பட்சத்தில், அடுத்த ஓரிரு மாதங்களிலேயே நோய் மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளது. அவ்வாறு மீண்டும் நோய் தாக்கும் போது, ஏற்கெனவே உட்கொண்ட மாத்திரைகள் உடலில் எவ்விதப் பலனையும் தராமல் நோய் எதிர்ப்புத்திறனை இழக்க நேரிடும். அதன் விளைவாக 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கூடுதல் காலம் தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும். எனவே, மருத்துவ பயனாளிகள் தங்களுடைய நலனையும், குடும்பத்தினரின் நலனையும் கருத்தில் கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் மாத்திரைகளைப் பாதியிலேயே கைவிடாமல், மருத்துவர்கள் பரிந்துரைத்த முழு கால அளவும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, இரண்டாவது முக்கிய அம்சம் உங்களின் உணவு முறை ஆகும். காசநோய்த் தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வர ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிக அவசியமாகும். குறிப்பாக, வீடுகளில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும். முட்டை, காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளான கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் போன்ற உடலுக்கு வலுசேர்க்கும் சத்தான உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டால்தான், உடல் எதிர்ப்புத்திறன் பெற்று இந்நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

மருத்துவ பயனாளிகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் நோக்கத்தோடு, நேயம் அறக்கட்டளை மற்றும் திருச்செங்கோடு சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து, இந்த ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் சிறப்பு ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளன. இந்நிகழ்வில் சண்முகா கல்லூரியின் நிர்வாக அறங்காவலரும் (Managing Trustee) நேரில் கலந்துகொண்டு இம்முயற்சிக்குத் துணைநின்றுள்ளார்.

முதற்கட்டமாக திருச்செங்கோடு வட்டாரத்தில் 25 நபர்களுக்கும், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 35 ஊட்டச்சத்து குறைபாடுள்ள மருத்துவ பயனாளிகளுக்கு ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் பேரீச்சம்பழம் -1கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ, கோதுமை மாவு -1கிலோ, ஊட்டச்சத்து கலவை மாவு - 1 கிலோ, கருப்பு கொண்டைக்கடலை-1கிலோ, சிவப்பு கொண்டைக்கடலை-1 கிலோ, பச்சைப் பயறு - 1 கிலோ, அவல் - 1 கிலோ, முட்டை - 30 ஆகியவை அடங்கிய தலா ரூ.1,050/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

காசநோய் பாதிக்ப்பட்டவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு நோயின் தீவிரத்தையும் சிகிச்சை விளைவுகளையும் பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, அவர்களின் உடல் எடை மற்றும் பொது உடல்நிலையை மேம்படுத்தி, காசநோய் சிகிச்சையை சிறப்பாக தொடர்வதற்கு இந்த ஊட்டச்சத்து ஆதரவு உதவுகிறது. மேலும், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் உடல்நிலை வெகுவாக சீரடைந்து, நோயால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உயிரிழப்பு அபாயத்தைக் குறைக்க உதவும். இதன் மூலம் காசநோயற்ற நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் இலக்கை அடைவதற்கு இந்த முயற்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

பொதுவாக, பெரியவர்கள் இதுபோன்ற சத்தான உணவுப் பொருட்கள் கிடைக்கும்போது, அவற்றை வீட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவது
இயல்புதான். ஆனால், நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நீங்கள் முதலில் முழுமையாகக் குணமடைந்தால்தான், எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தினரையும் குழந்தைகளையும் இன்னும் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியும். எனவே, உங்களுக்காகவே பிரத்யேகமாக வழங்கப்படும் இந்த ஊட்டச்சத்து உணவுகளை நீங்களே தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகளை முறையாகச் சாப்பிட்டு வந்தால்தான் உங்கள் உடல்நிலை தேறி, நோயிலிருந்து விரைவாக முழுமையாகக் குணமடைய முடியும்.

நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்வதும், சத்தான உணவுகளைச் சரிசமமான அளவில் சாப்பிடுவதும் முக்கியமாகும். எனவே, இந்த ஊட்டச்சத்துப் பொருட்களைத் தவறாமல் உட்கொள்ளுங்கள். உங்கள் 6 மாத கால முழு சிகிச்சைக்கும் தேவையான இந்த ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாதம் தோறும் தொடர்ந்து இலவசமாகவே உங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நோய்த்தொற்றிலிருந்து மிக விரைவில் மீண்டு வந்துவிடலாம் என்ற முழு நம்பிக்கையோடு இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவித மன அழுத்தமும் இன்றி மனதை எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu