மக்கள் பணியைத் தொய்வின்றி செய்வதற்கும், தங்களின் தொகுதிப் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (ஆகஸ்ட் 19) 110-விதியின் கீழ் அறிவித்தார்.
பராமரிப்பு வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் படியாக வழங்கப்படும் என அறிவித்தார். அதேநேரத்தில் அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாக வழங்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தச் சூழலில், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பேசிய மூன்று எம்எல்ஏக்களின் சொத்து விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேர்தலின் போது அவர்கள் பிரமாணப் பத்திரம் மற்றும் ADR India அறிக்கையின் கீழ் அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் வாகனங்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
தனக்காக இந்த கார் திட்டத்தை கேட்கவில்லை என்றும்; எளிய பின்னணியில் உள்ள எம்எல்ஏக்களுக்காக கேட்டதாகவும் ஜோதிமணி முதலமைச்சருக்கு நேற்று நன்றி தெரிவித்தபோது சட்டப்பேரவையில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ சண்முகன் சட்டப்பேரவையில் பேசியபோது, நியாயமான கோரிக்கை மக்களிடம் இருந்து வந்தாலும் சரி, சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் இருந்து வந்தாலும் சரி அதை உடனே நிறைவேற்றும் முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
அதேபோல், அரசு கொடுக்க இருக்கும் காரை, இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என தனக்கு பின்னாள் அமர்ந்திருக்க சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியதாக கூறினார். இதையடுத்து, இருக்கையில் இருந்த முதலமைச்சர் விஜய் வாய்விட்டுச் சிரித்தார்.
அதைத் தொடர்ந்து, பெரியகுளம் (தனி) தொகுதி எம்எல்ஏ சபரி ஐங்கரன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசும்போது கல்லூரி காலத்தில் காதல் தோல்வியுடன், வேலையில்லாமல் கார் இல்லாமல் இருந்தேன் என்றும்; முதலமைச்சர் தற்போது வேலையும் கொடுத்து காரும் கொடுத்துள்ளார் என்றும் பேசியிருந்தார்.
மேலும், சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து, எப்போதும் சட்டப்பேரவைக்கு ஆட்டோவில்தான் வருவதாகவும்; காவலர்கள் தான் எப்போது வந்தாலும் யார் என கேட்டு, எம்எல்ஏ என்று சொன்னால்தான் உள்ளே விடுகிறார்கள் என்றும் வேடிக்கையாக பேசியிருந்தார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது, விஜய் சிரித்துக்கொண்டே பின்பக்கமாக திரும்பி யார் பேசுவது என சபரியின் முகத்தை பார்த்தார். இந்த காட்சிகளும் வைரலாகின.
அசையும் சொத்து: ரூ.71 லட்சத்து 70 ஆயிரத்து 620
அசையா சொத்து: ரூ.1 லட்சத்து 4 ஆயிரம்
மொத்த சொத்து மதிப்பு: ரூ.72 லட்சத்து 74 ஆயிரத்து 620
வைத்துள்ள கார்: TATA TIGOR (ரூ.5 லட்சம்)

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு இருக்கும் அதேவேளையில் விமர்சனக் கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்எல்ஏக்களில் 190க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன் நேற்றை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதேபோல், தேவை உள்ளவர்களுக்கு மட்டும் தகுதியறிந்து காரை வழங்கலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.