• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /நடுநிலை பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட CM விஜய்!

நடுநிலை பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட CM விஜய்!

தமிழகத்தில் காலை உணவுத்திட்டம் இன்று முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதலாக 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

Written ByR Balaji
Published: Sep 22, 2026, 08:51 AM IST|Updated: Sep 22, 2026, 08:57 AM IST
joinshare
நடுநிலை பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட CM விஜய்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், இன்று முதல் அடுத்தகட்டமாக விரிவுப்படுத்தப்படுகிறது. இதன்படி, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இனி காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது.

மாணவர்களின் ஊட்டசத்து குறைப்பாட்டை போக்குவது, மாணவர்களின் வருகையை அதிகரிப்பது மற்றும் கல்வியை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கற்கும் சூழலை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் தமிழகத்தில் காலை உணவுத்திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது தமிழகம் முழுவதும் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 19.34 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களையும் திட்டத்தில் இணைக்க அரசு முடிவு செய்தது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் மேலும் 15.30 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக கூடுதலாக ரூ. 217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் விரிவாக்கத்தை பெரியார் பிறந்தநாளை செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றிருந்ததால், தொடக்க நிகழ்ச்சி செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சென்னை திருவான்மியூரில் இன்று இந்த விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்து வரும் மாணவர்களுடன் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் இணைக்கப்படுவதால், மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 34.64 லட்சமாக அதிகரிக்கிறது. மேலும், மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் தொகுதி இடம்பெறும் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் தாராபுரம் தொகுதி இடம்பெறும் திருப்பூர் மாவட்டம் ஆகியவற்றில் மட்டும் இன்று திட்டம் தொடங்கப்படவில்லை. இந்த இரண்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை உணவுத்திட்டத்தின் விரிவாக்கம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகள் பள்ளி அளவில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்கள், தட்டுகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள், பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தினமும் ஒரே உணவு வழங்கப்படுவதை தவிர்க்கும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி உணவு வகைகள் இடம்பெறும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை மீண்டும் உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை உணவு வழங்க்ப்படும் வகையில் உணவுப்பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu