SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.200-க்கு 10 மளிகை பொருட்கள்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு - என்னென்ன கிடைக்கும்?

அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை (அக்.30) தொடங்கி வைக்கப்படுகிறது.

Written By Sudharsan G
Published: Oct 29, 2026, 01:54 PM IST | Updated: Oct 29, 2026, 02:07 PM IST
Join

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 10 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளிபண்டிகை  நெருங்கி வரும் சூழலில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்குவதற்காக இந்த மளிகை  தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசு ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை: சொத்துக்களை அறிவிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை

நாளை முதல் விற்பனை

இந்த திட்டம் சென்னையில் நாளை (அக். 30) தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு அங்காடியில் 200 ரூபாய்க்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

10 பொருட்களின் பட்டியல்

கடும் விலைவாசி ஏற்றம்

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளன.

மேலும் படிக்க | TNPSC Job : தமிழக இளைஞர்களுக்கு மெகா தீபாவளி பரிசு! விரைவில் மின்வாரியத்தில் 8,000 வேலைவாய்ப்பு

பண்டிகை காலங்களிலும், மழைக் காலங்களிலும் விலைவாசி ஆண்டுத்தோறும் உயரக்கூடும் என்றாலும், இந்ததாண்டு எல்-நினோ தாக்கம், போதிய மழையின்மை, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாதது, காய்கறி உற்பத்தி பாதிப்பு மற்றும் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைவு ஆகியவையும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளன.

சன்ன ரக அரிசி விற்பனை

தமிழ்நாட்டில் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் பொன்னி அரிசி வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. அரிசி விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த அக். 17ஆம் தேதி முதல் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் 30 இடங்களில் முதல்கட்டமாக தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை

அதேபோல், வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் 35 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில், பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

மேலும் படிக்க | ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES