• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /30,000 பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசம் – 'வெற்றி மகளிர்' திட்டத்திற்கான அரசாணை வெளியீடு!

30,000 பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசம் – 'வெற்றி மகளிர்' திட்டத்திற்கான அரசாணை வெளியீடு!

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தில் 100% மானியத்தில் இலவச ஆடுகள் மற்றும் ரூ.6,000 கூடுதல் நிதி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 15, 2026, 17:39 IST|Updated: Nov 15, 2026, 17:49 IST
joinshare
30,000 பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசம் – 'வெற்றி மகளிர்' திட்டத்திற்கான அரசாணை வெளியீடு!
Image Credit: Vettri Magalir Scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் "வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 05.08.2026 அன்று சட்டப்பேரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, 28.10.2026 தேதியிட்ட இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ஜாக்பாட்: ரூ.50,000 உதவித்தொகை

ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு

2026-2027 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக மற்றும் நிதி ஒப்புதலைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் இதற்காக ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.109.75 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  

யாரெல்லாம் பயன் பெறலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள்

பெரும்பாலும் நகர்ப்புறமாக உள்ள சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 30,000 தகுதியுள்ள நபர்கள் பயனடைவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மானியம் மற்றும் கூடுதல் நிதியுதவி விவரங்கள்

ஒரு பயனாளிக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படுவதோடு (ஒரு ஆட்டின் விலை ரூ.6,000 வீதம் ரூ.30,000), அவற்றைப் பராமரிப்பதற்கான கூடுதல் நிதியுதவிகளையும் அரசே வழங்குகிறது:

காப்பீடு: ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்ய ரூ.1,500.

முதற்கட்ட ஊக்கத்தொகை: தீவனம் வாங்க மற்றும் கொட்டகை அமைக்க ரூ.2,500.

பராமரிப்பு ஊக்கத்தொகை: ஆடுகளை ஒரு வருடம் வளர்த்த பிறகு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2,000.

மாநிலம் முழுவதும் மொத்தம் 3,493 கிராமங்களில், ஒரு ஊராட்சிக்கு 8 பேர் வீதம் மொத்தம் 1.50 லட்சம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் பயனாளிகள் தேர்வு விரைவில் அந்தந்த வட்டார அளவில் தொடங்கப்பட உள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes