• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /TNTET விண்ணப்பத்தில் தவறு செய்துவிட்டீர்களா? ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர அறிவிப்பு!

TNTET விண்ணப்பத்தில் தவறு செய்துவிட்டீர்களா? ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர அறிவிப்பு!

TNTET Application Correction 2026: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு. SPECIAL TNTET 2 விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 3 நாட்கள் அவகாசம். இது தொடர்பாக TRB வெளியிட்ட 10 விதிமுறைகளை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 20, 2026, 10:09 IST|Updated: Nov 20, 2026, 10:09 IST
joinshare
TNTET விண்ணப்பத்தில் தவறு செய்துவிட்டீர்களா? ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர அறிவிப்பு!
Image Credit: TNTET Application Correction

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNTET Application Correction 2026: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (SPECIAL TNTET - 2) விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்கள் 20.11.2026 முதல் 22.11.2026 வரை உள்ள 3 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | மின் ஊழியர்களுக்குத் தமிழக அரசு கொடுத்த ஜாக்பாட்! கிராஜுவிட்டி ரூ.25 லட்சமாக உயர்வு

தேர்வு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரம்:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 01.09.2025-க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட சிறப்பு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள் - I மற்றும் தாள் - II) அறிவிக்கை கடந்த 26.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க 27.10.2026 முதல் 19.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், பிற்சேர்க்கை எண்.02A/2026-ன் படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் விண்ணப்பிக்க 05.11.2026 முதல் 19.11.2026 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.  

திருத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்:

இணையதளத்தில் (http://www.trb.tn.gov.in) விண்ணப்பங்களைத் திருத்தும்போது (Edit Option) கீழ்க்காணும் 10 நிபந்தனைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்:  

கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: இணையவழி விண்ணப்பத்தை முழுமையாகச் சமர்ப்பித்து (Final Submit), உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.  

இறுதிச் சமர்ப்பிப்பு கட்டாயம்: விவரங்களைத் திருத்திய பிறகு, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை உள்ள 'சமர்ப்பி' (Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்த பின்பு, இறுதியாக உள்ள 'Final Submit' பொத்தானை அழுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.  

அடுத்தடுத்த பகுதிகளைச் சரிபார்த்தல்: குறிப்பிட்ட பகுதியில் திருத்தம் செய்த பிறகு, தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும்; ஏனெனில் ஒரு இடத்தில் செய்யும் மாற்றம் மற்ற பகுதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.  

உறுதிமொழி ஒப்புதல்: திருத்தங்கள் முடிந்ததும் 'Print Preview Page'-க்குச் சென்று அனைத்தும் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, 'Declaration'-ல் ஒப்புதல் அளித்த பின்னரே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.  

மாற்றம் செய்யாதவர்கள்: விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யாதவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.  

மாற்ற முடியாத விவரங்கள்: விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.  

சாதி மற்றும் மாற்றுத்திறனாளி விவரங்கள்: சாதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் செய்யும்போது, கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.  

கூடுதல் கட்டணம் செலுத்தும் முறை: திருத்தத்தின் காரணமாகக் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத் தொகையினையும் மீண்டும் செலுத்த வேண்டும்.  

மீதித் தொகை திரும்பக் கிடைக்காது: திருத்தத்தின் போது குறைவாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித் தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.  

ஹால் டிக்கெட் வெளியீடு: விண்ணப்பதாரர்கள் இறுதியாகப் பதிவு செய்து சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்படும்.  

கடைசித் தேதி எச்சரிக்கை:

வருகிற 22.11.2026-க்குப் பிறகு விண்ணப்பத்தில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, திருத்தம் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து உடனடியாக இணையதளத்தில் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu