• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திருச்சி விஷ்ணு கோயில் டூர்! கம்மி விலையில் ஆலையங்களை சூப்பரா சுற்றி பார்க்கலாம்…

திருச்சி விஷ்ணு கோயில் டூர்! கம்மி விலையில் ஆலையங்களை சூப்பரா சுற்றி பார்க்கலாம்…

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலாக்கழகம், குறைந்த விலையில் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள விஷ்ணு கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்லும் திட்ட வரையரையை வெளியிட்டிருக்கிறது.

Written ByYuvashree M
Published: Aug 08, 2026, 08:29 PM IST|Updated: Aug 08, 2026, 08:40 PM IST
joinshare
திருச்சி விஷ்ணு கோயில் டூர்! கம்மி விலையில் ஆலையங்களை சூப்பரா சுற்றி பார்க்கலாம்…
Image Credit: Screen Grab

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பக்தர்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியிருக்கும் விஷ்ணு கோயில்களுக்கு உங்களை அழைத்து செல்ல இருக்கின்றனர். இந்த பயணத்தில் உங்களுக்கு ஆகும் செலவு, நீங்கள் எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்த மொத்த விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

விஷ்ணு கோயில்கள் தரிசனம்:

திருச்சியில் இருந்து சரியாக காலை 8.30 மணிக்கு கிளம்பி, பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு, சரியாக மாலை 5 மணிக்கு, நீங்கள் உங்கள் பயணத்தை முடித்துக்கொள்லலாம்.

சுற்றிப்பார்க்கும் இடங்கள் என்னென்ன?

  • புறப்படுதல்: காலை 8.30 மணிக்கு ஹோட்டல் தமிழ்நாடு திருச்சியில் இருந்து புறப்படுதல்.
  • காலை 8.45 மணிக்கு உறையூர் அழகிய மணவாள பெருமாள் ஆலையத்தை சென்றடைதல்
  • காலை 9.45 மணிக்கு, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி பெருமாள் ஆலையத்தை சென்றடைதல்
  • காலை 10.45 மணிக்கு உத்தமர்கோவில், புருஷோத்தமா பெருமாள் ஆலையத்தை சென்றடைதல்
  • காலை 11.00 மணிக்கு, குணசீலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாச்சல பெருமாள் ஆலையத்தை சென்றடைதல்
  • மதியம் 12.30 மணிக்கு குணசீலத்தில் உள்ல பிரசன்ன வெங்கடாச்சல பெருமாள் ஆலையத்தில் அண்ணதானம்
  • மாலை 3 மணிக்கு தாந்தோணியில் உள்ள கல்யாண வெங்கடரமண பெருமாள் ஆலையத்தை சென்றடைதல்.
  • மாலை 5 மணிக்கு, திருச்சி ஹோட்டல் தமிழ்நாடுவை சென்றடைதல்.

என்னென்ன கிடைக்கும்?

  • பஸ் வசதி மற்றும் சுற்றிப்பார்க்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
  • வழிகாட்டி, டூர் ஆரம்பித்தது முதல், முடியும் வரை உடனிருப்பார்.
  • தமிழ்நாடு ஹோட்டலில், சுற்றுலா பயணிகள் இளைப்பாரலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

  • பெரியவர்களுக்கு: ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட்
  • குழந்தைகளுக்கு : ஆதார் அட்டை / பள்ளி ஐடி
  • கைக்குழந்தைகளுக்கு : ஆதார் அட்டை / பிறப்பு சான்றிதழ்
  • NRI ஆக இருந்தால் : பாஸ்போர்ட், இந்திய விசா, OCI கார்ட், PIO கார்ட்
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் : 2

இந்த டூருக்கு ரூ.1100 வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : 1800 4253 1111 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். support@ttdconline.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tour Travel