SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது... ஆட்சி கவிழாது... திருமாவளவன்

எதிர்க்கட்சிகள் விவகாரங்கள் குறித்து அரசியல் செய்யலாமே தவிர அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது, எந்தச் சூழலிலும் ஆட்சி கவிழாது என்றும்; நாங்கள் தற்போது போராட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சியில் நாங்கள் இருந்தால் போராடலாம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 15, 2026, 23:53 IST | Updated: Nov 15, 2026, 23:57 IST
Image Credit: VCK President Thirumavazhavan | Screen Grab : X/ians_india
Join

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (நவ. 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவரி நீர் பிரச்னை குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

"காவிரி நீர் பிரச்சனை அல்லது மேகதாது அணைக்கட்டு பிரச்சினை என்பது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை அல்ல. ஒன்றிய அரசுக்கும் இரண்டு மாநில அரசுகளுக்கும் இடையிலான பிரச்சினை ஆகும்.

மேலும் படிக்க | பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா புக்கை வைங்க... நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு சு.வெ. பதிலடி!

புதிய அணை தேவையில்லை

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆணையம் மற்றும் குழுக்களுக்கும் அவற்றைத் தாண்டி உச்ச நீதிமன்றத்திற்கும் உள்ளது.

காங்கிரஸ் கட்சி நினைத்தால் இதற்கு தீர்வு கண்டுவிட முடியாது, அவரை சில காலம் கட்டுப்படுத்தவோ தள்ளிப் போடவும் முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி மாறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்கும். ஆனால் கர்நாடகாவில் விவசாயிகளே மேகதாது அணை கட்டுவதற்கு உடன்படவில்லை என்பதுதான் உண்மை.

பெங்களூருவுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு ஏற்கனவே இருக்கின்ற கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீரே எடுத்தால் போதுமானது. புதிதாக அணை கட்டத் தேவையில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளையும், விவசாய நிலங்களையும் அழிக்கத் தேவையில்லை.

காங்கிரஸ் நினைத்தாலும் முடியாது...

இது அரசியலுக்காக அவ்வப்போது எழுப்பப்படும் பிரச்சினையாகவே கருத முடிகிறது. தமிழ்நாடு அரசின் உடன்பாடு ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் அந்த அணையைக் கட்ட முடியாது. எனவே காங்கிரஸ் கட்சி நினைத்தால் இதை செய்துவிட முடியும், நிறுத்தி விட முடியும் என்பதை போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இந்த கோரிக்கை சரியானதாக இருக்கும், வலியுறுத்தி சொல்வதற்கு இடம் இருக்கிறது.

இது போன்ற குற்றச் செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. திமுக ஆட்சியாக இருந்தாலும், இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியாக இருந்தாலும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்போதும் அது தொடர்கிறது.

மேலும் படிக்க | விஜய் ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளது - செல்லூர் ராஜூ

முதல்வர் வழிநடத்த வேண்டும்

இதை கட்டுப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் குறிப்பாக முதலமைச்சருக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது. செக்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். சில அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கும் இதர அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதலைத் தர வேண்டியது அரசின் கடமையாகும். காவல்துறை இலாகா வைத்திருக்கும் முதலமைச்சர் காவல் மரணங்கள் இல்லாத வகையில் வழிநடத்த வேண்டும். அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.

ஆட்சி கவிழாது

எதிர்க்கட்சிகள் இதுகுறித்து அரசியல் செய்யலாமே தவிர அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது, எந்தச் சூழலிலும் ஆட்சி கவிழாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சியில் பங்கு பெற்றாலும் கூட தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டி வருகிறோம்.

தமிழ்நாட்டில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த உரிய கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

போராட வேண்டிய அவசியமில்லை

கடந்த ஆறு மாத ஆட்சியில் நடந்துள்ள சம்பவங்களில் இருந்து ஏராளமான படிப்பினைகளைப் பெற்று இருக்க வாய்ப்பு இருக்கிறது, அதைக் கருத்தில் கொண்டு ஆட்சி நிர்வாகத்தைத் திறம்பட நடத்த வேண்டும்.

எனவே நாங்கள் தற்போது போராட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சியில் நாங்கள் இருந்தால் போராடலாம். ஆளும் கட்சியில் பங்கேற்று உள்ளபோது சுட்டிக்காட்ட வேண்டியதை தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆளுநர் டெல்லி செல்வது என்பது வழக்கமான ஒன்றுதான், இதில் ஊகத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

மேலும் படிக்க | ஒரே குடும்பத்தில் இருவர் பயிர்க்கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி ஆகுமா? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES