• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கட்டணமில்லா பேருந்து திட்டம்: நாளை முதல்... இந்த பஸ்களில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்!

கட்டணமில்லா பேருந்து திட்டம்: நாளை முதல்... இந்த பஸ்களில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்!

Vetri Payanam Scheme Full Details: எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் நாளை முதல் (அக். 2) கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை நாளை தொடங்கிவைக்கிறார்.

Written BySudharsan G
Published: Oct 01, 2026, 11:54 AM IST|Updated: Oct 01, 2026, 12:20 PM IST
joinshare
கட்டணமில்லா பேருந்து திட்டம்: நாளை முதல்... இந்த பஸ்களில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்!
Image Credit: Vetri Payanam Scheme CM Vijay | Image Source : X/@CMOTamilNadu (AI Designed: ChatGPT)

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vetri Payanam Scheme Full Details: தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. எனினும், குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் மகளிருக்கு இந்த திட்டம்  செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் படிக்க | PM Yasasvi மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: எப்படி விண்ணப்பிப்பது? சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துத் திட்டம் விரிவாக்கம்

இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில்,  மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையிலான வெற்றிப் பயண திட்டம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்தெந்த பேருந்துகளில் விரிவுப்படுத்தப்பட்டது?

சமூக நீதி சிந்தனையுடன் மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளிக்கும் வகையில், வெற்றிப் பயணம் திட்டம் தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், மாநகரம், நகரங்களில் இயங்கும் சாதாரண அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி முதல்கட்டமாக  மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணத்தை இனி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

திருநங்கைகள், திருநர்களுக்கும்...

மாநிலம் முழுவதும் மகளிருக்கு எளிதில் அணுகும் வகையில் பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும். இதனால், கல்வி பயிலவும், பணியில் சேரவும், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்லவும் எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம் என அறிவித்தார்.

இது பெண்களுக்கு மட்டுமின்றி திருநங்கைகள், திருநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மேற்குத் தொடர்ச்சி மலை சர்ச்சை: கஸ்தூரிரங்கன் அறிக்கை என்றால் என்ன? முழு பின்னணி!

முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இந்நிலையில், மகளிருக்கான கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் நாளை (அக். 2) அமலுக்கு வருகிறது. சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை நாளை தொடங்கிவைக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல் pic.twitter.com/UbmjaElVi0

— CMOTamilNadu (@CMOTamilnadu) October 1, 2026

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவரது X பதிவில், "தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல்..." என அறிவித்துள்ளார்.

நாளை முதல்...

  • தற்போது தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரங்களில் இயங்கும் சாதாரண நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ., வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது.
  • நாளை (அக். 2) முதல் நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ் பேருந்து, எல்எஸ்எஸ் பேருந்து, டீலக்ஸ் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்கலாம்.
  • அதேபோல், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கு புறநகர் பேருந்திலும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
  • 40 கி.மீ., மேற்பட்ட மலைப் பகுதி கட் சர்வீஸ் சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணில்லாமல் பயணம் செய்யலாம்.

எந்த கட்டுப்பாடும் கிடையாது...

இதற்கு வருமான உச்ச வரம்போ அல்லது எத்தனை முறை பயணம் என்ற எண்ணிக்கையிலோ எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாட்டு பெண்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டில் பயணிக்கும் அனைத்து மகளிருக்கும் இது விரிவுப்படுத்தப்பட உள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மதுரைக்கு பயணம் செய்த முதலமைச்சர் விஜய், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை செயல்படுத்தினார்.

இதன்மூலம் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 காரட்டில் ஒரு கிராம் தங்கம் வழங்கப்பட்டது. தற்சமயம் 107 அரசு தாய்சேய் நல மையங்களில் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளன. 4.41 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | கொலை களமாக மாறும் தென் மாவட்டங்கள்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தீர்வு எப்போது முதல்வரே?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu