SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

Aavin Milk Products Price Hike: தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நாளை (அக்டோபர் 28) முதல் அமலுக்கு வரும் நிலையில், இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 27, 2026, 01:46 PM IST | Updated: Oct 27, 2026, 02:04 PM IST
Join

Aavin Milk Products Price Hike: தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் கூட்டுறவு நிறுவனமான ஆவின் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் குறைவான விலையில் மக்களுக்கு பால் விற்பனை செய்து வருகிறது. பால் மட்டுமின்றி, நெய், பால்கோவா, வெண்ணெய், யோகர்ட், குல்பி, ஐஸ்கிரீம், கார வகைகளை விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் கடைகள் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஆவின் பொருட்களின் விலையை அந்நிர்வாகம் உயர்த்தி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், ஆவின் நிர்வாகம் பால் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் நிர்வாகம் விளக்கம்

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும், நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் உபபொருட்களை நியாயமான விலையில் வழங்குவதிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதும் ஆவினின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்கு உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக பால் உற்பத்தி விளங்குகிறது. எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

மேலும் படிக்க: Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள்

தற்போதைய சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு. ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை உயர்விற்குப் பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நடவடிக்கை எவ்வித லாப நோக்கம் இன்றி. உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்கும், சந்தையில் ஆவின் பொருட்களின் போட்டித்தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும். பால் உப பொருட்களின் குறைந்த அளவு விலை திருத்தம் அவசியமானதாகும்.

மேலும், இந்த விலை திருத்தம் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதுடன், கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பினையும் வலுப்படுத்த முடியும்.

ஆவின் மேற்கொண்டுள்ள இந்த விலைத் திருத்தம், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், நுகர்வோருக்கு தரமான பால் உபபொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விஜய் vs தனுஷ்: தேவர் குருபூஜையில் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்!

விலை உயர்வு விவரம்

ஆவினில் 67 பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இதில் முக்கியமான சில பொருட்களின் விலை உயர்வு குறித்த பட்டியலை பார்ப்போம்.

மேலும் படிக்க: திருப்பதி கோவிலுக்கு காசுமாலை அணிந்து வந்த விவகாரம்..அமைச்சர் கீர்த்தனா அதிரடி பதில்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES