SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை..CM விஜய் பாதுகாப்பது ஏன்? திமுக சுறுக் கேள்வி..!

சமீபத்தில், தவெக கட்சியின் இரு அமைச்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு எழுந்த பின்னர் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நடந்தது குறித்து மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Written By Yuvashree M
Published: Nov 12, 2026, 03:34 PM IST | Updated: Nov 12, 2026, 03:49 PM IST
Image Credit: TVK | X Page
Join

தவெக அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளில் அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிக்கி வருகின்றனர். அப்படியொரு பூதாகரமான சர்ச்சைதான், சமீபத்தில் வெடித்தது. இதை கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து தவெக எம்எல்ஏக்களுக்கு ஆலோசனைக்கூட்டம் பனையூர் தவெக அலுவலகத்தில் நடைப்பெற்றது. அங்கு நடந்த ஒரு சம்பவம் குறித்துதான், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். இதோ முழு விவரம்.

தவெக எம்.எல்.ஏக்கள் மீது குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையா? என்றும் பிற கட்சியின் தலைவர்கள் கேட்டு வந்தனர்.

அதே போல திருச்சி துரையூரில், துணை சபாநாயகரான ரவி சங்கர், தன்னுடைய தொகுதியில் இருந்து வந்த ஒருவர் தண்ணீர் குறித்து புகார் அளிக்க வந்த போது அவரை தாக்கியதாகவும், குடும்பத்தையே கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இந்த இரு தவெக எம்.எல்.ஏக்கள் மீதுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர்.

எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்!

நிலைமை இப்படி இருக்க, சமீபத்தில் பனையூர் தவெக அலுவலகத்தில் முதல்வர் விஜய் தன் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் முதலில் பெண் எம்.எல்.ஏக்களுடன் கலந்துரையாடி அவர்களை அனுப்பி வைத்த முதல்வர் விஜய், அடுத்து ஆண் எம்.எல்.ஏக்களுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. அதிலும், குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த இரு எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியாக 15 நிமிடங்கள் உரையாடியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ராஜீவ்-க்கு துரோகமா..? கைநடுங்கிய சோனியா காந்தி.. கருணாநிதிக்கு பறந்த போன் கால்!

மு.க.ஸ்டாலின் பதிவு!

‘தவறு செய்தால் விடமாட்டேன்’ என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து, “பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வாய் மட்டும் வேலை செய்து என்ன பயன்?

தொடர்ந்து, “Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை” என கேட்டுள்ளார்.

அருள் விக்னேஷை காப்பாற்றுவது ட்வீட்..

மு.க.ஸ்டாலினை தொடர்ந்து எதிர்கட்சி தலைவரான உதயநிதியும் முதல்வர் விஜய்க்கு சில கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?

கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?

Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.

ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்” என கேட்டுள்ளார்.

மேலும் படிக்க | குரியன் ஜோசப் குழுவை கலைத்தது ஏன்? மாநில சுயாட்சி விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன? Explainer

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES