SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamilnadu Live News : முதலமைச்சர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை அதிகரிப்பு, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu live Updates : கூட்டணிக் கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை, திருவண்ணாமலை கார்த்திகை தீபம், தங்கம் விலை இன்று அதிகரிப்பு என்பது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 23, 2026, 10:41 IST | Updated: Nov 23, 2026, 11:21 IST
Image Credit: Tamil Nadu live updates
Join

Tamil Nadu live Updates : தவெக கூட்டணிக் கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை ஏற்றப்பட உள்ள நிலையில், ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு, பக்தர்கள் பெருமளவில் குவிந்து வருகின்றனர், தங்கம் விலை அதிகரிப்பு இன்று என்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளையும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்  

 

23 Nov 2026 11:20 IST

Chennai Weather News: சென்னைக்கு கனமழை அலர்ட்

நவம்பர் 23ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
 

23 Nov 2026 11:19 IST

Bisleri Water News: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் மாதிரி ஆய்வகப் பரிசோதனையில் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டது. பிஸ்லெரி தண்ணீரில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) போன்ற ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை புற்றுநோய்க்காரணிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

23 Nov 2026 10:50 IST

Tenkasi : கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி

Tenkasi : கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
 

23 Nov 2026 10:49 IST

Trichy Jobs : திருச்சி அரசு வேலைவாய்ப்பு

Trichy Jobs : திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 85 செவிலியர் பணியிடங்கள். மாதம் ரூ.21,000 ஊதியம். விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

23 Nov 2026 10:44 IST

Chennai Government Job 2026: சென்னை அரசு வேலைவாய்ப்பு

Chennai Government Job 2026: சென்னையில் பெண்கள் தனிச்சிறையில் மனநல ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 ஊதியம் (மேலும் படிக்க)
 

23 Nov 2026 10:43 IST

Tamil Nadu Government : நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை

Tamil Nadu Government : நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES