SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil Nadu Live : சூர்யாவின் சீன் திரைப்படம் ரிலீஸ், தீபாவளி சிறப்புப் பேருந்து, தீபாவளி விடுமுறை, தமிழ்நாடு மழை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil nadu Live : தீபாவளி விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பேருந்து, தமிழ்நாட்டு மழை நிலவரம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்.....

Written By Karthikeyan Sekar
Published: Nov 06, 2026, 10:23 AM IST | Updated: Nov 06, 2026, 12:49 PM IST
Join

Tamil nadu Live Today : தீபாவளி விடுமுறை இன்று மாலை முதல் தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஊர் பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

06 Nov 2026, 12:47 PM

Sivakasi Diwali Crackers: தீபாவளிக்கு பட்டாசு வாங்கியாச்சா?

ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியின் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசு வகைகளில் பல புதுமைகளை செய்கிறார்கள். தண்ணீரில்லாமல் நீந்தும் மீன்கள், ஓட்டுநர்கள் இல்லாத பந்தயக் கார்கள், தீப்பொறிகளால் பொங்கி வழியும் ஷாம்பெயின் பாட்டில்கள் என சிவகாசியின் பட்டாசு தயாரிப்பாளர்கள், பல புதிய வகைகளில் பாரம்பரிய வாணவேடிக்கைகளை வண்ணம், இயக்கம் மற்றும் ஒலியின் சிறிய காட்சிகளாக மாற்றி, தீபாவளிக்கு ஒரு புதிய தோற்றத்தை அளிக்கின்றனர்... (மேலும் படிக்க)

06 Nov 2026, 12:04 PM

Chennai News: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசலின்றி, எளிதாக செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 6) பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
 

06 Nov 2026, 12:02 PM

Tamil Nadu Weather News : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான அர்னாப், முரசு புயலின் பாதிப்பில் இருந்தே ஆந்திரா மீளாத நிலையில், மற்றொரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. (மேலும் படிக்க)
 

06 Nov 2026, 12:01 PM

Gingee Girl Missing News : செஞ்சி சிறுமி எங்கே?

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வில்லிபாட்டு குழுவினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
 

06 Nov 2026, 11:30 AM

Delhi Air Pollution: காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி

நாட்டின் தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று டெல்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது. நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) மிகவும் மோசமான பிரிவில் 389-ஐ எட்டியதுடன், பல கண்காணிப்பு நிலையங்கள் கடுமையான மாசுபாட்டைப் பதிவு செய்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, நகராட்சி அதிகாரிகள் தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தண்ணீர் தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்... (மேலும் படிக்க)

06 Nov 2026, 10:35 AM

Tamil Nadu government school scholarship : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.36 லட்சம்

Tamil Nadu government school scholarship : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் PG படிக்க ரூ.36 லட்சம் வழங்குகிறது தமிழ்நாடு அரசு. டிசம்பர் 31 கடைசி தேதி, விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்க (மேலும் படிக்க)

06 Nov 2026, 10:33 AM

Tamil Nadu land registration latest news : பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு?

Tamil Nadu land registration latest news : பத்திரப்பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில், இது பொதுமக்களுக்கு என்னென்ன சுமைகளை ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

 

06 Nov 2026, 10:31 AM

TET teachers latest news : TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி!

TET teachers latest news : TET ஆசிரியர்களுக்கு உடனடி பணிச்சான்று வழங்கும் விதமாக மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது குறித்த முழு விவரம் இங்கே   

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES