Tamil Nadu Live News: தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு, உபி தேர்தல் வாக்குறுதி, அக்னிவீர் திட்டம் நீக்கமா? - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil nadu News Live : மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்த தமிழ்நாடு அரசு, உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொங்கியுள்ள அகிலேஷ் யாதவ், ஆட்சிக்கு வந்தால் ஆக்னிவீர் திட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்.....
Tamil nadu News Live : மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ள தமிழ்நாடு அரசு, சென்னையில் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தவும் டெண்டர் வெளியிட்டுள்ளது. நிலமற்ற ஏழைப் பெண்களுக்கு நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கும் மண்ணின் மகள் திட்டம் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
22 Nov 2026 15:46 IST
World News Tamil: ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கிடைத்த நீதி
ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலையில் மியான்மர் அரசு ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மியான்மர் இந்த குற்றங்கள் தொடர்பாக ஒரு நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்கிறது. (மேலும் படிக்க)
22 Nov 2026 15:44 IST
TN Govt Job News: மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட சமுகநல அலுவலரின் கீழ் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (மேலும் படிக்க)
22 Nov 2026 15:43 IST
Chennai Power Cut News: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை (நவம்பர் 23) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
22 Nov 2026 11:15 IST
தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்! வணிகவரித்துறையின் விளக்கம்
Tamil Nadu Government : தொழில் முனைவோருக்கு வெளியாகியிருக்கும் குட் நியூஸ் என்னவென்றால் 20 கிலோ மீட்டர் வரை எடை மேடைக்குச் செல்ல E-Way Bill தேவையில்லை என வணிகவரித்துறை அதிரடி விளக்கமளித்துள்ளது. (மேலும் படிக்க)
அதிமுகவில் அடுத்தடுத்து பிளவுகள் ஏற்பட்டு தலைமை மீது அதிருப்தி உண்டாகி வரும் நிலையில், தன்னைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். இவரது பதில் அதிமுகவில் பெரும் சலசலப்பை கிளப்பி இருக்கிறது. (மேலும் படிக்க)
22 Nov 2026 11:06 IST
Free Cylinder Scheme: பொங்கலுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்
தவெக அரசின் ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 1.30 கோடி குடும்பங்கள் வரை பயன்ப்பற உள்ளதாகவும் கூறப்படுகிறது. (மேலும் படிக்க)
22 Nov 2026 10:22 IST
விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை மானியம்!
Mannin Magal Scheme: நிலமற்ற மகளிரை நில உரிமையாளராக்கும் 'மண்ணின் மகள் திட்டம்' தொடர்பான முக்கிய அப்டேட்டை தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)
22 Nov 2026 10:20 IST
9,613 கேங்மேன் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்!
9,613 கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை டான்ஜெட்கோ வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.