Tamil News LIVE: செஃப் தாமு காலமானார்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தனுஷ் - மகளிர் அணி சந்திப்பு
Tamil News LIVE Updates: தமிழ்நாடு வானிலை மற்றும் மழை நிலவரம்; அர்னாப் புயல் நிலவரம்; தனுஷ் மகளிர் அணி சந்திப்பு; தமிழ்நாடு அரசியல் செய்திகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...
தமிழ்நாடு வானிலை அப்டேட்ஸ்: சென்னை வானிலை ஆய்வு மையம் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது. தேனி, திண்டுக்கல், மதுரையில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அர்னாப் புயல்: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது.
தனுஷ் சந்திப்பு: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இன்று அவரது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
25 Oct 2026, 12:11 PM
வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'சிறப்பு சுருக்கத் திருத்த' (Special Summary Revision - SSR) பணி குறித்து விளக்குவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.... (மேலும் படிக்க)
25 Oct 2026, 10:56 AM
IMD வானிலை முன்னெச்சரிக்கை
இந்தியாவில் தற்போது வானிலை மாறும் காலகட்டம். பல மாநிலங்களில் குளிர்காலம் மெல்ல தொடங்கும் நிலையில், சில மாநிலங்களில் இப்போதுதான் பருவமழை தொடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது... (மேலும் படிக்க)
25 Oct 2026, 10:54 AM
அக்டோபர் 28 வருகிறதா DA Hike அறிவிப்பு?
திங்களன்று (அக்டோபர் 26) DA குறித்து அரசு ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை (அக்டோபர் 28) நடக்கவுள்ளது. இந்த நாளில், அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்புக்கான அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகின்றது... (மேலும் படிக்க)
25 Oct 2026, 10:52 AM
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்
பல பணியாளர் சங்கங்கள் நடைமுறையில் மாற்றங்களைக் கோருகின்றன. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பணவீக்கம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதும், படிகளைக் கணக்கிடும் முறையில் திருத்தங்களைக் கொண்டுவருவதும் அடங்கும். இவைதவிர அகவிலைப்படி கணக்கீட்டு முறைகளில் திருத்தமும் ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது... (மேலும் படிக்க)
25 Oct 2026, 10:15 AM
Tamil News Live : புயல் நிலவரம் என்ன?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகத் தீவிர அர்னாப் புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் காற்றின் வேகம் மற்றும் மழை நிலவரம் குறித்த IMD எச்சரிக்கை (மேலும் படிக்க)
25 Oct 2026, 10:12 AM
MS Dhoni Updates : தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வா...?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, வரும் 2027 ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நீண்ட நாளுக்கு பின் மௌனம் கலைத்துள்ளார். (மேலும் படிக்க)
25 Oct 2026, 10:11 AM
Tamil News Live : செஃப் தாமு காலமானார்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்ற முனைவர் கே. தாமோதரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். (மேலும் படிக்க)
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.