பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வானிலை அப்டேட்: வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இது வரும் அக். 26ஆம் தேதி புயலாக மாறும் என வானிலை மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. புயலாக உருவாகும்பட்சத்தில் இந்த புயலுக்கு ARNAB (அர்னாப்) என பெயர் சூட்டப்படும். இது வங்கதேசம் நாடு பரிந்துரைத்த பெயராகும். நடப்பாண்டில் வங்கக் கடலில் உருவாகும் முதல் புயல் இதுதான்.
தூத்துக்குடியில் கொலை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அதிகாலையில் வீடு புகுந்து தாய், தந்தையை தாக்கி உள்ளனர். இதில் தாய் உயிரிழந்தார். மேலும், இரண்டு பெண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.