Tamil News LIVE: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்.. அன்பில் மகேஷ் நவ.6 வரை நீதிமன்ற காவல்!
Tamil Nadu News Today Live Update: தேனி சிறையில் 17 கைதிகள் சேர்ந்து சிறைக் காவல்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. இது போன்ற இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்.
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் சிறைக் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய நிலையில், 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். மீதமுள்ளவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவம்பர் 06 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அர்னாப் புயல் நாளை (அக்டோபர் 28) கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. 2023 அக். 7இல் நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் முதல்முறையாக நாடாளுமன்ற தோ்தல் இன்று செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.
புதுச்சேரியின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந்த நிலையில், விவசாயிகள் உடனடி இழப்பீடு வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (மேலும் படிக்க)
27 Oct 2026, 12:18 PM
Puducherry Free Dhoti Saree Scheme: வேட்டி-சேலைக்கு பதிலாக ரூ.1000
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி-சேலை திட்டத்திற்கு பதிலாக, ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது... (மேலும் படிக்க)
27 Oct 2026, 12:03 PM
Cyclone Arnab Update: அர்னாப் புயல் புதுச்சேரி ஏனாம் முன்னெச்சரிக்கை
அர்னாப் புயல் தீவிர புயலாக ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில், புதுச்சேரி அரசு அவசர தயார்நிலையில் உள்ளது. படகுகள் இயக்கம் ரத்து, மீனவர்களுக்குத் தடை மற்றும் மின்துறை பாதுகாப்பு எச்சரிக்கைகள் பற்றிய விவரங்களை அறிய... (மேலும் படிக்க)
27 Oct 2026, 11:59 AM
LPG Cylinder Update: நவம்பரில் விலை குறைகிறதா?
நவம்பர் மாதத் தொடக்கத்தில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றம் இருக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மக்களுக்கு இந்த நல்ல செய்தியை அளிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை... (மேலும் படிக்க)
27 Oct 2026, 11:09 AM
Theni Jail Escape News: தவெக அரசை தாக்கிய EPS
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். (மேலும் படிக்க)
27 Oct 2026, 10:59 AM
TN Government Update: கட்டிட விதிகளில் மாற்றம் செய்த தமிழக அரசு
திங்கள்கிழமை அன்று தமிழக அரசு 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019'-ல் திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்படி, உயரமான கட்டிடங்கள் அல்லாத பிற கட்டிடங்களுக்கான (Non High-Rise Buildings - NHRB) உயர வரம்பு 18.3 மீட்டரிலிருந்து 19.5 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
27 Oct 2026, 9:45 AM
8th Pay Commission Update: விடுப்பு பணமாக்கலில் மாற்றம்
8வது ஊதியக் குழு உறுப்பினர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, 'விடுப்பு பணமாக்கல்' வரம்பை தற்போதைய 300 நாட்களிலிருந்து 450 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
27 Oct 2026, 9:43 AM
Indian Railways Update: 45 பைசாவில் ரயில் டிக்கெட் காப்பீடு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 27, 2026) முதல், ரயில் நிலைய கவுன்டர்களில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு பொருந்தும். பயணிகள். ரயில் நிலைய கவுன்டர்களில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கான இந்த காப்பீட்டுத் தீர்ப்பின் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம்... (மேலும் படிக்க)
27 Oct 2026, 9:37 AM
Theni Jailbreak: 17 கைதிகள் தப்பியோட்டம்!
தேனி மாவட்ட சிறையில் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பிய நிலையில், தேனி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். (மேலும் படிக்க)
27 Oct 2026, 9:35 AM
Aavin: விலை உயர்வு!
Aavin New Rate List: தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை உயர்த்தப்பட்டு அக்டோபர் 28 முதல் புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வருகிறது. (மேலும் படிக்க)
நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.