SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: அக்வான் புயல்.. இன்று குழந்தைகள் தினம்.. தங்கம் விலை சரிவு!

Tamil News LIVE Updates: வங்கக்கடலில் அக்வான் புயல் நவம்பர் 16 ஆம் தேதி உருவாகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.

Written By R Balaji
Published: Nov 14, 2026, 10:00 AM IST | Updated: Nov 14, 2026, 10:08 AM IST
Join

வங்கக் கடலில் நவ.16 ஆம் தேதி 'அக்வான்' புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதுவும் முந்தைய புயல்கள் போல ஆந்திரத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார். தங்கம் விலை இன்றும் சரிவை கண்டுள்ளது. சவரனுக்கு ரூ. 640 குறைந்து ஒரு பவுன் ரூ. 1,00,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று குழந்தைகள் தினம் என்பதால் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், கொல்கத்தா, நியூசண்டிகார் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடக்கிறது. 
 

14 Nov 2026 10:05 IST

தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,615க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

14 Nov 2026 10:02 IST

இன்றைய ராசிபலன்

Today Rasi Palan: இன்று (நவம்பர் 14, 2026) சனிக்கிழமை, ஐப்பசி 28 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
 

14 Nov 2026 10:01 IST

Tanishq: மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்!

மதுரை பழங்காநத்தம் தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மாறுவேடத்தில் கடைக்கு வந்து நோட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் பட்டதாரி இளைஞரின் வீட்டில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES