SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு! சீர்மரபினர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு. சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 12, 2026, 06:55 AM IST | Updated: Oct 12, 2026, 07:04 AM IST
Join

திருச்சி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவிகளைத் தகுதியான பயனாளிகள் தடையின்றிப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.  

மேலும் படிக்க: வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் விபரம்:

சீர்மரபினர் நல வாரியத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்களுக்குப் பின்வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன:  

1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை உதவித்தொகை.   
2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக ரூ.30,000/-.   
3. ஈமச்சடங்கு செலவுகளுக்கான உதவித்தொகையாக ரூ.5,000/-.   
4. கல்வி உதவித்தொகையாகப் படிப்புக்கு ஏற்ப ரூ.1,000/- முதல் ரூ.8,000/- வரை.   
5. திருமண உதவித்தொகையாக ரூ.3,000/- அல்லது ரூ.5,000/-.   
6. மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000/-.   
7. மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல் திட்டத்தின் கீழ் ரூ.750/-.   
8. முதியோர் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1,200/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.  

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

மேற்கண்ட நலத்திட்ட உதவிகளைப் பெற விரும்புவோர் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராகவும், 18 வயது பூர்த்தி அடைந்து 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்) இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதி பெறுகின்றனர். 

மேலும் படிக்க: மாதம் ரூ.12,000 உதவித்தொகை - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இணையதள சேவை மற்றும் முக்கிய நடைமுறை:

சீர்மரபினர் நல வாரியத்தில் புதிய உறுப்பினராகப் பதிவு செய்தல், பதிவைப் புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகிய அனைத்து சேவைகளையும் எளிதாக்கும் வகையில் www.dncwb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.  

சீர்மரபினர் நல வாரியத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாகப் பதிவு பெற்றுள்ளவர்களின் விவரங்களை மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, உறுப்பினர்கள் தங்களுடைய சுய விவரங்களான உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட ஆவணங்களை "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சிராப்பள்ளி" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES