SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முக்கிய அறிவிப்பு! இலவச வகுப்புகள் முழு விவரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அருமையான வாய்ப்பு. திருச்சி, இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 15, 2026, 09:11 AM IST | Updated: Oct 15, 2026, 09:20 AM IST
Join

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்குத் தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அரசுப் பணி கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

6,574 காலிப்பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணையின்படி, மொத்தம் 6,574 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 05.11.2026-க்குள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இப்போட்டித் தேர்வு 10.01.2027 அன்று நடைபெறவுள்ளது.  

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

குரூப் 4 போட்டித் தேர்வுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அதே சமயம், 10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட உயர் கல்வித் தகுதி (Higher Secondary / Diploma / Degree) பெற்ற இதர அனைத்துப் பிரிவு தேர்வர்களுக்கும் உச்ச வயது வரம்பு ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திருச்சி மாவட்டத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் இன்று (15.10.2026) காலை 10.00 மணி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பாடவாரியாக மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, இலவசப் பாடக்குறிப்புகளும் (Study Materials) வழங்கப்பட உள்ளன. தொடர்புக்கு: 0431-2413510, 9499055902  

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி எப்போது?

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 21.10.2026 (புதன்கிழமை) மதியம் 2.00 மணிக்கு இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தொடர்ந்து வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களின் வழிகாட்டுதலுடன் அலகு வாரியான மாதிரித் தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்படவுள்ளன.  

தேவையான ஆவணங்கள்: 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்பப் படிவம்.  

விண்ணப்பிக்க கடைசி நாள்: விருப்பமுள்ள தேர்வர்கள் 21.10.2026 புதன்கிழமை மாலைக்குள் நேரில் வந்தோ அல்லது தொலைபேசி வழியாகவோ பதிவு செய்துகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 9486253826, 7639756839. அரசு வேலை தேடும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ, மாணவிகள் கட்டணமில்லா இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES