• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?

சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?

Trichy latest news : நீட்ஸ் (NEEDS) திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை தொழில் கடன் மற்றும் ரூ.75 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 11, 2026, 11:30 AM IST|Updated: Sep 11, 2026, 11:36 AM IST
joinshare
சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Trichy latest news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Trichy latest news : தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கவும், படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றவும் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்’ (NEEDS - New Entrepreneur cum Enterprise Development Scheme) கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களைத் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருவதாகத் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் தயாள் தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி:

புதிய தொழில்களைத் தொடங்கி வெற்றிபெற விரும்பும் தகுதியான இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் வாயிலாகக் கடனுதவி வழங்கப்படும். இதில், திட்ட மதிப்பீட்டில் (Project Cost) 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு நேரடி மானியமாக வழங்குகிறது.

கூடுதல் சலுகைகளும் வட்டி மானியமும்:

குறிப்பாக, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பிரிவினரை ஊக்கப்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினருக்குப் (ST) பொது மானியத்துடன் கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமன்றி, வங்கிகள் வழங்கும் இந்த தொழில் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டியை அரசே ஏற்கும் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

யாருக்கெல்லாம் தகுதி உண்டு?

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக (First-generation entrepreneur) இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகவும்; பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு: ஏற்கனவே மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும், நேரடி விவசாயம் சார்ந்த தொழில்களைத் தவிர்த்து, ஏனைய அனைத்து வகையான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு இக்கடனுதவி பொருந்தும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் அலுவலக முகவரி:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய முதல் தலைமுறை தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், விண்ணப்பத்தின் அச்சு நகல் மற்றும் தேவையான அசல் கல்வி, இருப்பிட, சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன், பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, சங்கம் ஹோட்டல் எதிரில், ராஜா காலனி பேருந்து நிறுத்தம், திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி பயனடையலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற விரும்புவோர் 0431-2460823, 0431-2460331 அல்லது 8925534027 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu