• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /திருச்சி இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Trichy District Jobs 2026: திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு. டிகிரி மற்றும் 8 ஆம் வகுப்பு கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 21, 2026, 07:20 PM IST|Updated: Sep 21, 2026, 07:24 PM IST
joinshare
திருச்சி இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Image Credit: Trichy District Jobs

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Trichy District Jobs 2026: திருச்சிராப்பள்ளி இளைஞர் நீதி குழுமத்தில் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், ஒரு வருட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயள் வெளியிட்டுள்ளார். இப்பணிகளுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்கள்:

உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் (Assistant cum Bench Clerk - 01 பணியிடம்): ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (10+2+3 அல்லது 11+1+3 முறை) பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற COA (Computer on Office Automation) அல்லது கணினி கல்வியில் Diploma/Degree முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மாதத் தொகுப்பூதியம் ரூ.25,000/-.

இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் (Junior Assistant cum Record Clerk - 01 பணியிடம்): 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதத் தொகுப்பூதியம் ரூ.20,000/-.

அலுவலக உதவியாளர் (Office Assistant - 01 பணியிடம்): 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதத் தொகுப்பூதியம் ரூ.13,000/-.

அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்கள் 01.09.2026 அன்றைய தேதியின்படி 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சுயசான்றொப்பமிட்ட கல்வி மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 7/10/2026 மாலை 5.30 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 0431-2413055 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu