SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

Trichy Government Job : திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் அரசு வேலைவாய்ப்பு. 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்

Written By Karthikeyan Sekar
Published: Oct 10, 2026, 09:42 PM IST | Updated: Oct 10, 2026, 09:54 PM IST
Join

Trichy Government Job  : திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடத்தை நிரப்பும் நோக்கில் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசுத் தலைப்பில் காலியாக உள்ள 1 ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அறிவித்துள்ளார்.  

சம்பள விவரம் மற்றும் வயது வரம்பு

இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு ஊதியம் ரூ.19,500 அடிப்படையில், மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் மற்றும் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக, பழங்குடியினருக்கு 42 வயதும், பழங்குடியின முன்னாள் ராணுவத்தினருக்கு 55 வயதும், பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு 52 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

கல்வி மற்றும் ஓட்டுநர் அனுபவத் தகுதிகள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ் தமிழக அரசின் தகுதிவாய்ந்த அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், மோட்டார் வாகனங்களை 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டியதற்கான நடைமுறைப் பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.  

விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிக்க விரும்பும் பழங்குடியினத்தவர் தங்களுக்குரிய விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tiruchirappalli.nic.in அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளமான www.ncs.gov.in மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று மற்றும் பணி முன் அனுபவச் சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். அத்துடன் ரூ.30 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுய முகவரியிட்ட அஞ்சல் உறை தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.  

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் 09.10.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பின்வரும் முகவரிக்குச் சென்றடைய வேண்டும்: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), 3-வது தளம், திருச்சிராப்பள்ளி - 620 001.  

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், தகுதியான நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் நேர்காணல் கடிதம் வாயிலாகத் தனியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES