• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /ரூ.71,000 வரை சம்பளம்.. தமிழக அரசு துறையில் ஓட்டுநர் பணி.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

ரூ.71,000 வரை சம்பளம்.. தமிழக அரசு துறையில் ஓட்டுநர் பணி.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Trichy Jobs: திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.71,900 வழங்கப்படுகிறது. எனவே, இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 27, 2026, 03:18 PM IST|Updated: Sep 27, 2026, 03:19 PM IST
joinshare
ரூ.71,000 வரை சம்பளம்.. தமிழக அரசு துறையில் ஓட்டுநர் பணி.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Trichy Jobs: திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, ஈப்பு ஒட்டுநர் நிலையில் காணப்படும் பழங்குடியினருக்கான (Scheduled Tribe) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு அரசுத் தலைப்பில் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 09.10.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, ஈப்பு ஒட்டுநர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு (01.07.2026) அன்று உள்ளவாறு இருக்க வேண்டும். அதன்படி, பழங்குடியினர் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் (பழங்குடியினர்) 52 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8அம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1998)-ன்படி, தமிழக அரசின் தகுதி அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாத ஊதியமாக ஊதியபடி நிலை 8(1)-ன்படி, தர ஊதியம் ரூ.19500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Trichirapalli.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 09.10.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), 3-வது தளம், திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது. தகுதியயுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் நேர்காணல் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

  • இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
  • விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி முன் அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 
  • குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  • இப்பணியிடம் பழங்குடியினருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • அஞ்சல் வில்லை ரூ.30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal Cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்
  • எந்த ஒரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu