SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருச்சி மாவட்ட வெங்காய விவசாயிகள் கவனத்திற்கு: காப்பீடு செய்ய நவம்பர் 30 கடைசி நாள்!

Trichy Latest News : திருச்சி மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் 7 வட்டார விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Nov 17, 2026, 20:41 IST | Updated: Nov 17, 2026, 20:44 IST
Image Credit: Trichy Latest News
Join

Trichy Latest News : திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் 'பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்' (PMFBY) கீழ் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வறட்சி, வெள்ளம் மற்றும் எதிர்பாராத மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்கு இத்திட்டம் விவசாயிகளுக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.  

மேலும் படிக்க | ஆதார் இல்லாமலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கலாம்: யாருக்கெல்லாம் இந்த விலக்கு?

எந்தெந்தப் பகுதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்?

2026-ஆம் ஆண்டின் ராபி சிறப்புப் பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் திருச்சி மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 7 வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வெங்காயப் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடைசி தேதி மற்றும் பிரீமியம் தொகை விவரம்

ராபி சிறப்புப் பருவ வெங்காய சாகுபடிக்கான பயிர் காப்பீட்டை மேற்கொள்ள 30.11.2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் வெங்காயப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,085.50 வீதம் பிரீமியம் தொகையாகச் செலுத்த வேண்டும். இந்தக் காப்பீட்டுத் தொகையை அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகச் செலுத்தி விவசாயிகள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

நடப்பு பருவ அடங்கல் மற்றும் சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை

மேற்கண்ட ஆவணங்களுடன் விவசாயியின் பெயர், முழு விலாசம், சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தின் பரப்பளவு, சர்வே எண், உட்பிரிவு மற்றும் பயிரிடப்பட்டுள்ள நிலம் அமைந்துள்ள கிராமம் ஆகிய விவரங்களைத் துல்லியமாக அளித்துப் பதிவு செய்ய வேண்டும். எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, உரிய காலத்திற்குள் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தி இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES