• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /அக்., 2 UPI சேவையை பயன்படுத்த முடியாது! மக்களுக்கு பேரிடி..ஏன் தெரியுமா?

அக்., 2 UPI சேவையை பயன்படுத்த முடியாது! மக்களுக்கு பேரிடி..ஏன் தெரியுமா?

அக்டோபர் 15ஆம் தேதி, புதிய வணிகர் தள்ளுபடி விகிதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு எதிராக, வர்த்தகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, வரும் அக்டோபர் 2ஆம் தேதி, UPI இல்லாத தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Written ByYuvashree M
Published: Sep 24, 2026, 11:30 AM IST|Updated: Sep 24, 2026, 12:03 PM IST
joinshare
அக்., 2 UPI சேவையை பயன்படுத்த முடியாது! மக்களுக்கு பேரிடி..ஏன் தெரியுமா?
Image Credit: No UPI Day | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் வர்த்தகர்கள், யுபிஐ கட்டணங்களுக்கு எதிராக, தங்களின் கோபத்தை வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றனர். வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதலாக ரூ.2000த்திற்கும் மேல் உள்ள வணிக பரிவர்த்தனைகளுக்கு, (Merchant Payments) 0.4 வரை MDR கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வர இருக்கிறது. இந்த கட்டணம், சாதாரண வாடிக்கையாளர்களை பாதிக்காது என்று தெரிவித்த அரசு, இதனால் நேரடியாக பணம் செலுத்துபவர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை என்று கூறியது. இந்த புதிய MDR கட்டண விதிகள், வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனும் கருத்து நிலவி வருகிறது.

No UPI Day -என்ன அர்த்தம்?

புது MDR விதிகளின் காரணமாக, நாட்டின் பல்வேரு பகுதிகளில் இருக்கும் வர்த்தகர்கள் UPI கட்டணங்களுக்கு எதிராக போராட தொடங்கி இருக்கின்றனர். இதையடுத்து, அகில இந்திய வியாபார் மண்டல் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு போன்ற முக்கிய வர்த்தக அமைப்புகள், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை யுபிஐ இல்லாத தினமாக அறிவித்திருக்கின்றனர். அன்றைய நாளில், வணிகர்கள், யுபிஐ கட்டணங்களை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளில், பொது மக்கள் ரொக்கம் மற்றும் கார்டை  பயன்படுத்தி பொருட்களை வாங்க வேண்டும் என கூறப்படுகிறது.

தொழிலதிபர்கள் சொல்வது என்ன?

யுபிஐ பரிவர்த்தனைகளில், வணிகர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 0.4% MDR கட்டணத்தை எதிர்த்துதான் வணிகர்கள் தங்களின் குரலை உயர்த்தி வருகின்றனர். குறிபாக, பெட்ரோல், டீசல், மளிகை பொருட்கள், மின்னணு பொருட்கள் மற்றும் தானியங்கள் மீதுள்ள லாப வரம்பு என்பது ஏற்கனவே மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | UPI கட்டணங்களால் Google Pay, Phonepe நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... ரூ.7,500 கோடி வருமானம்

இந்த புதிய வரியானது, மேலும் நிதி சுமையை அதிகரிக்கும் என்பதால், இந்த No UPI Day-வை அறிவித்திருக்கின்றனர். அக்டோபர் 15ஆம் தேதிக்குள் MDR குறித்த முடிவு மாற்றப்படவில்லை என்றால், UPI QR Code இயந்திரங்களை அகற்றி விடுவோம் என்று வர்த்தக சங்கங்கள் ஏற்கனவே எச்சரித்து இருக்கின்றன.

அமைப்புகள் ஆதரவு..!

அரசின் இந்த முடிவினால், வணிகர்கள் கடும் கோபமடைந்திருக்கின்றனர். இதன் விளைவாகத்தான் சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களின் சுமார் 125 வணிக அமைப்புகள், UPI எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவு அளித்திருக்கின்றன. பெட்ரோல் பம்ப் டீலர்கள், மகாராஷ்டிர வர்த்தக சபையும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றன.

3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்:

வாரத்தில் 5 நாட்கள் வேலை முறை, ஊக்கத்தொகை திட்டம் ரத்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘யுனைட்டட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ எந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால், செப்டமர் 28ஆம் தேதி முதல், செப்டம்பர் 30ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவர் எனும் காரணத்தால், வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது செப்டம்பர் 27ஆம் தேதியன்று மட்டும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுபிஐ சேவைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | செப்.26 முதல் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி .. காரணம் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Reserve Bank of India