• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

RBI Repo Rate: ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தும் இந்த முடிவு, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான பணவியல் கொள்கைக் குழுவால் (MPC) ஒருமனதாக எடுக்கப்பட்டது. பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய சூழல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 07, 2026, 11:01 AM IST|Updated: Oct 07, 2026, 11:21 AM IST
joinshare
ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!
Image Credit: RBI Repo Rate

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.. ஷூட்டிங் Mode-ல் CM விஜய்.. காட்டமாக விமர்சித்த ஸ்டாலின்

தலைதூக்கும் அரிவாள் வெட்டு.. ஷூட்டிங் Mode-ல் CM விஜய்.. காட்டமாக விமர்சித்த ஸ்டாலின்

2

ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

3

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..உள்ளாட்சி தேர்தலில் போட்டியா? புதுக்கதையா இருக்கே..

4

B.Sc. பட்டதாரிகளுக்கு IFFCO வேளாண் பட்டதாரி பயிற்சிப் பணியாளர் வேலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

5

டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

RBI Repo Rate: சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமையன்று ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) உயர்த்தியது. மத்திய வங்கி மற்ற வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமான 'ரெப்போ விகிதத்தில்', பிப்ரவரி 2023-க்குப் பிறகு இப்போதுதான் அதிகரிப்பை அறிவித்துள்ளது.

பணவியல் கொள்கைக் குழுவின் முடிவு

ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தும் இந்த முடிவு, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான பணவியல் கொள்கைக் குழுவால் (MPC) ஒருமனதாக எடுக்கப்பட்டது. பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய சூழல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில் பேசிய மல்ஹோத்ரா, "உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. உலகளாவிய பொருளாதாரச் சூழல் பலவீனமாகவே உள்ளது. ஈரான் போரின் தாக்கமும் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கக்கூடும்," என்று கூறினார்.

இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், தொடர்ந்து உறுதியுடன் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார். "அண்மைக்காலத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பு ஏதுமில்லை," என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரும்

ரெப்போ விகித உயர்வால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவது இதுவே முதல் முறையாகும். 

அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றிற்கு மத்தியில், 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்வு இருக்கும் என்று நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர்.

சாமானிய மக்களுக்கு நேரடி பாதிப்பு

ரெப்போ விகிதத்தை உயர்த்தும் ரிசர்வ் வங்கியின் முடிவு சாமானிய மக்களின் பணப்பையை நேரடியாகப் பாதிக்கும். பணவீக்கம் மற்றும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டில் சில்லறை பணவீக்க விகிதம் சீராக அதிகரித்து வருகிறது. 

மேலும், கடந்த ஏழு மாதங்களாகத் தொடரும் மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகமாகவே உள்ளன. இந்தியா தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. இதன் விளைவாக, இந்த சர்வதேச ஏற்ற இறக்கம் இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

மாதாந்திர EMI சுமை அதிகரிக்கும்

  • ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ விகித உயர்வு, வணிக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து நிதி பெறுவதற்கு ஆகும் செலவை அதிகரிக்கும். 
  • அதை ஈடு செய்ய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான வட்டிகளையுக் அதிகரிக்கும். 
  • வங்கிகள் வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும்.
  • இதனால் சாமானியர்களுக்கு மாதாந்திர EMI சுமை அதிகரிக்கும்.

ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்ததால் EMI மற்றும் கடன் விகிதங்களில் ஏற்படும் தாக்கம் பற்றி இங்கே காணலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

ரூ.20 லட்சம் கடனுக்கான கணக்கீடு

கடன் தொகைகால அளவுவட்டி விகிதம்EMIமொத்த வட்டிகட்ட வேண்டிய மொத்த தொகை
ரூ.20 லட்சம்20 ஆண்டுகள்8.75%ரூ.17,674ரூ.22,41,811ரூ.42,41,811
₹20 லட்சம்20 ஆண்டுகள்9%ரூ.17,995ரூ.23,18,685ரூ.43,18,685
கூடுதலாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும்?-0.25%ரூ.321ரூ.76,874ரூ.76,874

ரூ.30 லட்சம் கடன் தொகைக்கான கணக்கிடு:

8.75% வட்டி விகிதத்தில்:

  • கடன் தொகை: ரூ.30 லட்சம்
  • கால அளவு: 20 ஆண்டுகள்
  • வட்டி விகிதம்: 8.75%
  • EMI: ₹26,511
  • மொத்த வட்டி: ₹33,62,717
  • செலுத்த வேண்டிய மொத்த தொகை: ₹63,62,717

9% வட்டி விகிதத்தில்:

  • கடன் தொகை: ரூ.30 லட்சம்
  • கால அளவு: 20 ஆண்டுகள்
  • வட்டி விகிதம்: 9%
  • EMI: ₹26,992
  • மொத்த வட்டி: ₹34,78,027
  • செலுத்த வேண்டிய மொத்த தொகை: ₹64,78,027

கூடுதலாக செலுத்த வேண்டிய வட்டித் தொகை: ₹1,15,310
கூடுதலாக செலுத்த வேண்டிய மொத்தத் தொகை: ₹1,15,310

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

  • இந்திய ரிசர்வ் வங்கி தேவைப்படும்போது வங்கிகளுக்கு கடன் வழங்குகிறது.
  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதம் 'ரெப்போ விகிதம்' (repo rate) என்று அழைக்கப்படுகிறது.
  • ரெப்போ விகிதம் அதிகரித்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிக செலவில் கடன் பெற வேண்டியிருக்கும்.
  • ரெப்போ விகிதம் குறைந்தால், வங்கிகளால் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும். 
  • இது வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இதனால் சாமானியர்களின் மாதத் தவணைகள் (EMI) நேரடியாகப் பாதிக்கப்படும்.

ஆகையால் ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய ரிசர்வ் வங்கி முதல் சாமானியர்கள் வரை அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

முந்தைய நான்கு MPC கூட்டங்களின் போது, ​​ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25%-லேயே தக்கவைத்திருந்தது. இருப்பினும், பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதற்குப் பதிலளிக்கும் விதமாகவும் இந்த உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. 

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தக்கூடும் என்று நிதி நிபுணர்கள் கணித்திருந்தனர். இதற்கு முன், பிப்ரவரி 2023-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50%-ஆக உயர்த்தியிருந்தது.

மேலும் படிக்க | 50,000 ஓய்வூதியதாரர்கள், ஆஷா பணியாளர்களுக்கு குட் நியூஸ் தந்த டெல்லி அரசு: மாஸ் அறிவிப்புகள்!! 

Add Zee News as a Preferred Source
TAGS:
Reserve Bank of India