• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explained : வயிற்றில் குழந்தை இருக்கும் போது..தாய் சிகிரெட் பிடித்தால் என்ன ஆகும்? மருத்துவர்கள் விளக்கம்..

Explained : வயிற்றில் குழந்தை இருக்கும் போது..தாய் சிகிரெட் பிடித்தால் என்ன ஆகும்? மருத்துவர்கள் விளக்கம்..

பாலிவுட் நடிகையான ஆலியா பட்டின் தாயாரும் நடிகையுமான சோனி ரஸ்தான், சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் பகிர்ந்த சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

Written ByYuvashree M
Published: Nov 18, 2026, 12:22 IST|Updated: Nov 18, 2026, 12:29 IST
joinshare
Explained : வயிற்றில் குழந்தை இருக்கும் போது..தாய் சிகிரெட் பிடித்தால் என்ன ஆகும்? மருத்துவர்கள் விளக்கம்..
Image Credit: Smoking while pregnant | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தி திரையுலகில் பெரிய நடிகையாக விளங்கி வருகிறார், ஆலியா பட். ரன்பீர் கபூரின் மனைவியான இவர், தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனவராகவும் இருக்கிறார். இவருடைய தாயாரான சோனி ரஸ்தானும் ஒரு பிரபல நடிகை ஆவார்.

அதிர்ச்சியை கிளப்பிய நேர்காணல்..!

சோனி ரஸ்தான், சமீபத்தில் Shaque : Trust No One எனும் டிவி தொடரில் நடித்துள்ளார். இது சம்பந்தமான நேர்காணலில் கலந்து கொண்டுள்ள அவர், தான் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்தும் பேசியிருக்கிறார்.

சோனி ரஸ்தான் பேசும் போது, ‘கும்ரா’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் போது அவர் தன் கதாப்பாத்திரத்திற்காக நிறைய சிகிரெட் பிடிக்க வேண்டி இருந்ததாக கூறியிருக்கிறார். “நான் ஒரு நாளில் 100 சிகிரெட் வரை பிடித்திருப்பேன் என நினைக்கிறேன். அப்போது என் வயிற்றில் ஆலியா இருந்தாள் என்பது எனக்கே தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தனக்கு மீண்டும் மீண்டும் சிகிரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றியதாகவும் அந்த கேரக்டருக்காக தான் அதை அர்பணித்ததாகவும் பேசியிருக்கிறார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன..?

ரஸ்தானின் இந்த பேச்சு, வைரலானது. இதையடுத்து நெட்டிசன்கள் பலர், எப்படி அந்த நடிகை வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு நாளில் 100 சிகிரெட்டுகளை பிடித்தார் என்றும், இதனால் என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு மருத்துவர்கள் அனைவரும் இது குறித்த தங்களின் மருத்துவ ரீதியிலான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், குறிப்பக குழந்தை வயிற்றில் இருப்பது தெரியாத போது சிகிரெட்டில் இருக்கும் டொபாக்கோ புகையால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து பேசும் மருத்துவர்கள், சிகிரெட்டில் இருக்கும் அபாயகரமான ரசாயனங்கள், கர்ப்பமாக இருக்கும் பெண் புகைப்பிடிக்கும் போது அவர் ரத்தத்தில் கலந்து, நஞ்சுக்கொடியைக் கடந்து, குழந்தையின் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் விநியோகத்தைப் பாதிக்கின்றன என கூறுகின்றனர்.

பிறக்காத குழந்தையை சிகரெட் எப்படி பாதிக்கிறது?

கர்ப்பமாக இருக்கும் போது புகை பிடிப்பது, குழந்தையின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலனை கண்டிப்பாக பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிக்கோட்டின், கார்பன் மோனோக்ஸைட் மற்றும் பிற நச்சுத்தன்மை கொண்ட சிகரெட்டில் இருக்கும் பொருட்கள், வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

”வயிற்றில் இருக்கும் குழந்தை சுவாசத்திற்கு முழுக்க முழுக்க தன் தாயாரை சார்ந்து இருக்கிறது. இந்த சமயத்தில் புகை பிடிப்பது குழந்தையின் முக்கிய வளர்ச்சி காலத்தில் அதன் ஆக்ஸிஜன் ஊட்டத்தை சீராக இல்லாமல் செய்யலாம்” என்று தெரிவிக்கின்றனர்.

கார்பன் மோனாக்ஸைட், ஹீமோகுளோபினுடன் பிணைந்து, குழந்தைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. நிக்கோட்டின் இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, நஞ்சுக்கொடி வழியாகச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கக்கூடும். இது, கருவின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் இயல்பான விநியோகத்தில் குறுக்கிடலாம் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

சிகிரெட்டில் இருக்கும் சிறிய அளவிலான நிக்கோட்டின் மற்றும் கார்பன் மோனாக்ஸைட் கூட குழந்தையின் உடல் நலனை பாதிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | EPS மாத ஓய்வூதியத்தில் 3 மடங்கு ஏற்றமா? நவம்பர் 19 முக்கிய EPFO CBT கூட்டம்

என்னென்ன ரிஸ்க் வரும்..?

குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய் சிகிரெட் புகையை சுவாசிப்பது, கர்ப்பப்பைக்குள் இருக்கும் கருவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும், பிறக்கும் போது எடை குறைவாக பிறப்பதற்கும் வழிவகுக்கும்.

கருவுற்று இருக்கும் தாய்மார்கள், புகை பிடிக்கும் போது, குறிப்பிட்ட குழந்தை பிறக்கும் காலத்திற்கு முன்பே 37 வாரங்களுக்கு முன்பாக குழந்தை பிறக்கலாம் என கூறப்படுகிறது. குறை பிரசவத்தில் பிறக்கு குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், பால் சுரப்பதில் சிரமம், உடல் சூடு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம்.

டொபாக்கோ புகைக்கு ஆளாகும் கருவில் இருக்கும் குழந்தைகளின் நுரையீரல் வளர்வதில் சிக்கல் ஏற்படலாம். இதனால், சுவாச கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படலாம்.

நிக்கோட்டினை உபயோகிப்பது, குழந்தையின் மூளை வளர்ச்சியிலும் பங்கம் விளைவிக்கலாம். கற்றல் திறன், நடத்தை ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் ஊறு விளைவிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பது, உதடுகள் பிளவுபடுவது, உள்ளிட்ட பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான அதிக அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

கர்பிணிகள் புகைப்பிடிப்பது, நஞ்சுக்கொடியில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். நஞ்சுக்கொடி அறுந்து போதல், ஞ்சுக்கொடி பிரிதல் மற்றும் சவ்வுகள் முன்கூட்டியே கிழிதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுத்தலாம்.

டொபாக்கோவை உபயோகித்தல், குழந்தைகள் இறந்து பிறப்பது,  பிறந்த பிறகு ஏற்படும் திடீர் சிசு மரண நோய்க்குறி (SIDS) ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையதாக இருக்கிறது.

தெரியாமல் புகைப்பிடித்தால் என்ன செய்வது..?

மேற்குறிப்பிட்ட நேர்காணலில், ஆலியா பட்டின் தாயார் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பது தெரிவதற்கு முன்னரே புகைப்பிடித்துள்ளார். பல தாய்மார்களுக்கு இது போன்ற சூழல் ஏற்பட்டிருக்கலாம். இதற்கு மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், குழந்தைக்கு எதுவும் ஆகி விடுமோ என பயப்படாமல், அதற்கு மேல் சிகரெட்டை பயன்படுத்தக்கூடாது என்று கூறுகின்றனர். இதை எந்த நிலையில் நிறுத்தினாலும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிப்பதை தவிர்க்க முடியும்.

இதை நிறுத்துவதால் குழந்தையின் ஆக்ஸிஜன் மேம்படுவதோடு, உடல் நலன் மேம்படலாம். தொடர்ந்து, நீங்கள் எந்த மருத்துவரிடம் ஆலோசனை பெருகிறீர்களோ அவரிடம் உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி கூறிவிடுவது நல்லது.

அடிக்கடி செக்-அப் செல்வது, அல்ட்ரா சவுண்ட் மூலம் குழந்தையை கவனிப்பது, மருத்துவரிடம் குழந்தை நலனை மேம்படுத்த அட்வைஸ் கேட்பது உள்ளிட்ட விஷயங்களை செய்யலாம்.

குழந்தை பிறந்த பிறகும், பெற்றோர் இருவரும் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அந்த பச்சிளம் குழந்தையின் உடல் நலன் மேலும் மேம்படும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: ரூ.25,000 டு ரூ.68,750... ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான ஓய்வூதிய உயர்வு காத்திருக்கு

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips