SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீட்டு முறை மாறுமா? டிஏ மர்ஜர் சாத்தியமா?

8th Pay Commission: அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட சூத்திரம் உள்ளது. தொழிலாளர் பணியகத்தால் (Labour Bureau) வெளியிடப்படும் 'தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்' (AICPI-IW) 12 மாத சராசரி உயர்வின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 25, 2026, 10:44 AM IST | Updated: Oct 25, 2026, 10:49 AM IST
Join

8th Pay Commission: 8வது ஊதியக் குழு தனது கலந்துரையாடல்களின் மற்றொரு சுற்றை நிறைவு செய்துள்ளது. அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், மும்பையில் பணியாளர் சங்கங்களுடன் ஊதியக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு முன்னதாக, நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஊதியக் குழு, சென்னை, புதுச்சேரி, டெல்லி, லடாக், கொல்கத்தா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தது.

8வது ஊதியக் குழு கூட்டங்கள்

8வது ஊதியக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டங்களில், பல தொழிற்சங்கங்கள் பின்வரும் முக்கிய அம்சங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன:

பல பணியாளர் சங்கங்கள் நடைமுறையில் மாற்றங்களைக் கோருகின்றன. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பணவீக்கம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதும், படிகளைக் கணக்கிடும் முறையில் திருத்தங்களைக் கொண்டுவருவதும் அடங்கும். இவைதவிர அகவிலைப்படி கணக்கீட்டு முறைகளில் திருத்தமும் ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது அடிப்படை ஊதியத்தில் 60% அகவிலைப்படி வழங்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது அடிப்படை ஊதியத்தில் 60% அகவிலைப்படி (DA) வழங்கப்படுகிறது. இந்த அளவு இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால், ஊழியர்களின் ஊதியத்தை அதற்கு ஏற்ப ஈடுசெய்யும் நோக்கத்துடன் அகவிலைப்படி வழங்கப்பட்டு, ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் முதல் இதில் திருத்தம் செய்யப்படுகின்றது.

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட சூத்திரம் உள்ளது. தொழிலாளர் பணியகத்தால் (Labour Bureau) வெளியிடப்படும் 'தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்' (AICPI-IW) 12 மாத சராசரி உயர்வின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அகவிலைப்படி உயரும்போது, ​​அதனுடன் தொடர்புடைய போக்குவரத்துப்படியும் (Transport Allowance) உயரும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: தீபாவளிக்கு முன் முக்கிய அறிவிப்பு!! காத்திருக்கும் அரசு ஊழியர்கள்

அகவிலைப்படி தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் என்ன?

பல்வேறு ஊழியர் சங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள், தற்போதுள்ள அகவிலைப்படி கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருமாறு 8-வது ஊதியக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளன.

FNPO பரிந்துரை

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பில் ஏற்றம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்

BPS பரிந்துரை

மேலும், சில ஊழியர் அமைப்புகள் 'தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை' (AICPI-IW) மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளன. எனினும், அகவிலைப்படியில் (DA) ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8வது ஊதியக் குழுவின் மூன்று உறுப்பினர்கள், அகவிலைப்படி தொடர்பான விவகாரத்தை ஆய்வு செய்த பிறகு, அது குறித்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அகவிலைப்படி கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முன், அத்தகைய மாற்றங்கள் தனது நிதி நிலையை எப்படி பாதிக்கும் என்பதை ஆராய்ந்து மோசமான விளைவுகள் இருக்காது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான தருணம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான தருணமாக பார்க்கப்படுகின்றது. இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு அரசு அதற்கு ஒப்புதல் அளித்த பின்னர் ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, ஊதிய முறை மாற்றங்கள் என பல முன்னேற்றங்களை ஊழியர்கள் காணலாம்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு... எகிறும் எதிர்பார்ப்புகள்: அக்டோபர் 22, 23 8வது ஊதியக் குழுவின் முக்கிய கூட்டம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES